தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

29 May 2026, 10:01 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதிப்பெண் ‘சரிபார்ப்பு’... விடைத்தாள் ‘சரமாரி’!

சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் லட்சணத்தை மெச்சியே ஆக வேண்டும். கடந்த ஆண்டு 1.31 லட்சம் விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்கள் வந்த நிலையில், இந்த ஆண்டு அது 2.94 லட்சமாக எகிறியிருக் கிறது! சுமார் 8.56 லட்சம் விடைத் தாள்களில் தங்களின் மதிப்பெண் களைச் சரிபார்க்க மாணவர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள் என்றால், திருத்தலில் எவ்வளவு ‘தவறான அணுகுமுறை’ இருந்திருக்க வேண்டும்? இதனால் 17 லட்சம் மாண வர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. உயர் நடுத்த ரக் குடும்பத்து பிள்ளைகள் வெளி நாட்டுப் பல்கலைக்கழக வாய்ப்பு களை இழந்து தவிக்க, சாதாரணக் குடும்பத்து மாணவர்களோ உள்நாட்டிலேயே திகைத்து நிற்கிறார்கள். சிபிஎஸ்இ தனது தவறுகளை உணர்ந்து, மாண வர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும். அடுத்த முறை யாவது ‘கண்ணைத் திறந்து’ விடைத்தாள்களைத் திருத்தப் பழகுவார்களா?

மரத்தை வெட்டு... அப்புறம் தடம் மாற்று!

மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹூ- பன்னா ரயில்வே திட்டத்திற்காக, பன்னா புலிகள் வாழும் 316 ஹெக்டேர் வனப்பகுதியில் 54,578 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. மக்கள் வரிப்பணம் ₹24.78 கோடி செலவும் செய்யப்பட்டது. சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் அலறலை பா.ஜ.க. அரசு காதிலேயே வாங்க வில்லை. ஆனால் இப்போது, “வளைவுகள் கூர்மையாகவும், சாய்வுகள் ஆபத்தாகவும் இருப்பதால் இந்தத் தடம் பாது காப்பற்றது; எனவே திட்டத்தைக் கைவிடுகிறோம்” என்று கூலாக அறிவித்துள்ளனர்! அப்படி யானால் வெட்டப்பட்ட 54,000 மரங்களுக்கும், சுற்றுச்சூழல் கேடுக்கும் யார் பொறுப்பு? கொட்டப்பட்ட மக்கள் பணத் திற்கு யார் பதில் சொல்வது? கொடுமை என்னவென்றால், 1 கி.மீ தள்ளிப் போடப்படும் புதிய பாதைக்காக மீண்டும் 50,000 மரங்களை வெட்டப் போகிறார்களாம்! பா.ஜ.க. ஆட்சியில் தொழில்நுட்பத் திறமைக்கும் வேலை இல்லை; மரங்களின் மீதும் அக்கறை இல்லை!

சமையல் எரிவாயு: ‘பேரல்’ கணக்கில் ஊற்றிய அரசுப் பூச்சு!

ஈரான் போருக்குப் பின் உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி நாளொன்றுக்கு 50,000 பேரல்களாக உயர்ந்து விட்டதாகவும், மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் பெட்ரோலிய அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா ‘அல்வா’ கொடுத்துள்ளார். ஆனால், அவர் சொல்லாமல் மறைத்த உண்மை என்ன வென்றால், இந்தியாவின் ஒரு நாள் தேவை 4,00,000 பேரல்கள்! வெறும் 50,000 பேரல்களை வைத்துக்கொண்டு மீதி 3.5 லட்சம் பேரல்களுக்கு எங்கே போவது? ஏற்கெனவே வணிக ரீதியிலான சமையல் எரிவாயு விநியோகம் முடங்கிக் கிடக்கிறது; வீட்டுத் தேவைகளுக்கும் சிலிண்டர்கள் வரக் காலதாமத மாகிறது. எரிசக்தி பாதுகாப்பில் கோட்டை விட்ட மோடி அரசாங்கம், அதை மறைக்கத் திசைதிருப்பல் தரவுகளை அள்ளி வீசுகிறது. மக்களின் அடுப்பு எரிகிறதோ இல்லையோ, அரசின் ‘புள்ளிவிவர அடுப்பு’ பலமாகவே எரிகிறது!

வெறுப்புப் பிரச்சாரம்: 98 சதவீத பா.ஜ.க. ‘சாதனை’!

வெறுப்புப் பிரச்சாரம்: 98 சதவீத பா.ஜ.க. ‘சாதனை’! கடந்த மாதத்தில் (2026 ஏப்ரல்) முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வெறுப்புத் தாக்குதல்கள் குறித்த அதிர்ச்சிகரமான தரவுகளை “முஸ்லிம் மிர்ரர்” பத்திரிகை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்த 49 தாக்கு தல்களில் 48 தாக்குதல்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே நடந்துள்ளன! அதா வது 98 சதவீதத் தாக்குதல்கள் ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சியில்தான் அரங்கேறியுள் ளன. உத்தரப்பிரதேசத்தில் 16, மகாராஷ்டிராவில் 11, உத்தர்கண்ட்டில் 6, மத்தியப் பிரதேசத்தில் 3 எனப் பட்டியல் நீள்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தெலுங்கானாவில் மட்டும்தான் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. சங் பரிவாரத்தின் தொடர் வெறுப்பு அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் தங்குதடையற்ற ‘தொடர்கதை’யாகி வருவது வெட்கக்கேடானது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.