முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

1 Jul 2026, 8:49 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

ஈரான் மீதான போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், தொழில்துறைகள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொண்டனர். இதன் விளைவுகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால், முக்கிய ஊடகங்களின் செய்திகள் ஆட்சியாளர்கள் முன்வைக்கும் பிரச்சாரங்களுக்குள்ளேயே முடங்கிப்போயுள்ளன.

மே.வ.காங்கிரஸ் தலைவர் சுபங்கர் சர்க்கார்

தேர்தல் ஆணையம் ஒரு காலத்தில் கொண்டிருந்த கண்ணியத்தையும் நம்பகத்தன்மையையும் ஞானேஷ் குமார் முற்றிலுமாகச் சிதைத்துவிட்டார். இவ்வளவு காலமும் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்த்து வந்தது. ஆனால் ஞானேஷ் குமார் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. அவர் பாஜக பேச்சை மட்டுமே கேட்கிறார்.'

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

பாஜகவும் அதன் குண்டர்களும் ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கி, இந்த நாட்டை ஒரு குண்டர் ராஜ்ஜியமாக மாற்றி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, நமது அமைப்புகள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ்

ராமர் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்விரண்டிற்கும் பாஜக துரோகம் இழைத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram