முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

17 May 2026, 9:31 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

பொதுமக்களை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் மோடிதான் முதலில் வெளிநாடு சுற்றுப் பயணத்தை தவிர்க்க வேண்டும். மக்களை வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் என கூறும் அவரால் வீட்டில் இருந்து ஏன் பணியாற்ற முடியவில்லை? எங்கோ நடக்கும் போருக்கு நம் நாட்டில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

திரைக்கலைஞர் சோனாக்சி சின்ஹா

சினிமாவில் முழு உண்மையை பேச முயன்றால், அந்த படத்திற்கு பல தடைகள் ஏற்படுகிறது. இதனால் கதைகளை தேர்வு செய்வதிலும், உண்மைகளைச் சொல்வதிலும் திரையுலகினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்து சினிமாத்துறை கடினமாகியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

தர்மேந்திர பிரதான் 22 லட்சம் நீட் மாணவர்களுக்குத் துரோகம் இழைத்து, நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார். அரசாங்கமே நாடாளுமன்றத்தை நம்பாதபோது, நீட் சீர்திருத்தம் குறித்த அதன் வாக்குறுதியை மாணவர்கள் எவ்வாறு நம்ப முடியும்? பிரதான் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

வரலாற்றாசிரியர் டாக்டர் ருச்சிகா ஷர்மா

மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே உச்சநீதிமன்றம் உள்ளது. ஆனால் நீதிக்காகப் போராடும் இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என்றும் அழைப்பது இந்த உன்னதமான அமைப்பின் மாண்பு சீர்குலைந்துபோன அதிர்ச்சியளிக்கும் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram