முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

18 Jul 2026, 8:45 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

“பாஜகவினர் தங்கள் சொந்தக் குழந்தைகளுக்கே உண்மையாக இல்லாதபோது, அவர்களுக்குக் கடவுளோ அல்லது மனிதர்களோ ஒரு பொருட்டல்ல. அவர்கள் அனைவரையும் ஏமாற்றுகிறார்கள். ‘பணம்’ மட்டுமே பாஜகவின் மதம்.”

ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

சோனம் வாங்சுக் மற்றும் இந்த இளைஞர்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இனி வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. இப்போது அனைவரும் ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்.

எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி

சோனம் வாங்சுக் அவர்கள் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவரை ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றியது தவறான செயலாகும். வினாத்தாள் கசிவுகள் அதிகரித்து வரும் கல்விச் செலவு மற்றும் மாணவர் தற்கொலைகள் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான சிக்கல்களாக உள்ளன.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

தில்லி காவல்துறை ஆணையர் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே மாற்றப்பட்டுள்ளார். ஜந்தர் மந்தரில் நடைபெற்றபோராட்டங்களைக் கையாள்வதில் அரசுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram