தீக்கதிர் முக்கிய செய்திகள்
5 Jun 2026, 9:02 pm

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்

நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும், நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் உண்மையிலேயே அக்கறை இருந்தால் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதிலும், உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், நீதிமன்றங்களின் திறனை மேம்படுத்துவதிலும்தான் இருக்க வேண்டும். நீதிமன்ற கோடைகால விடுமுறை தொடர்பான விவாதம் பற்றி அல்ல.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி

கடந்த பத்தாண்டுகளில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு ஐந்து மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. எல்ஐசியிடம் தங்கள் சேமிப்பை ஒப்படைத்துள்ள கோடிக்கணக்கான இந்தியர்களில் ஒருவராகவும், பொதுமக்கள் சார்பிலும் இதற்கான பதில்களைப் பெற உரிமை உண்டு.

நாட்டுப்புறப் பாடகி நேகா சிங் ரத்தோர்

தில்லியில் ஒரு ஹோட்டல் தீ விபத்து ; பீகாரில் ஒரு மருத்துவமனை தீ விபத்து என துயரங்கள் தொடர்ந்து மீண்டும், மீண்டும் நிகழும்போது ஏன் எந்தவொரு பாடமும் கற்றுக்கொள்ளப்படுவதில்லை? இதற்கான பொறுப்பு ஏற்கும் தன்மை ஏன் ஒருபோதும் தொடர்வதில்லை என்பதுதான்.

மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா

பிரதமரின் பட்டப்படிப்பு உண்மையானதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா படிப்பு நிச்சயமாக உண்மையானதுதான். ஆனாலும்அவரது பேச்சுக்கள், அறிக்கைகள் மிக மோசமாக உள்ளன. இவர்களெல்லாம் பாஜகவிற்கு வந்த உடன் அறிவாளியாக மாறி மோசமாக கருத்து தெரிவிக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.