தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

14 Jun 2026, 9:21 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

அமெரிக்காவின் ஆட்டோ பிரச்சார போஸ்டரை கிழித்தெறிந்த தில்லி மக்கள்

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை (ஜூலை 4) முன்னிட்டு, அந்நாட்டு தூதரகம் இந்தியா வில் ‘பிரீடம் 250 (#Freedom250)’ என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. அமெ ரிக்கா - இந்திய நட்புணர்வை மேம்படுத்து வதாக கூறி தில்லியிலுள்ள அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஆட்டோக்கள் ‘நட மாடும் விளம்பரப் பலகைகளாக’ பயன் படுத்த கூறியுள்ளார். அந்த போஸ்டர் களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுதந்திர தேவி சிலை இடம்பெற்றி ருந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் ஆட்டோ பிரச்சாரத்திற்கு தில்லி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போஸ்டர் களை கிழிக்க தொடங்கியுள்ளனர். இத னால் ஆட்டோ ஓட்டுநர்கள் அமெரிக்கா வின் பிரச்சார போஸ்டரை கிழித்த பின்பே ஆட்டோவை இயக்கி வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்க போஸ்டர் ஒட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் செய்தி யாளரிடம் கூறுகையில்,”தங்களுக்கு அமெரிக்கா மீதோ, டிரம்ப் மீதோ தனிப் பட்ட ஈர்ப்பு எதுவும் இல்லை. அமெரிக்க தூதரகம் தேயிலைத் தூள் பாக்கெட்டு கள், குளிர்பானங்கள், கிழிந்த ஆட்டோ மேற்கூரைகளை சரிசெய்வதாக கூறி, இந்த விளம்பரங்களை ஒட்டியது. ஆனால் ஓமனில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், இந்த போஸ்டர்கள் அமெரிக்காவிற்கு எதிரான கோபத்தின் இலக்காக மாறி விட்டன. அதனால் தான் தில்லி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் போஸ்டர்களை கிழித்து எச்சரித்துள்ளனர்” என அவர்கள் கூறினர்.

பிரான்ஸ் நாட்டில் முதலீட்டாளர்களைச் சந்தித்த மோடி

பிரான்ஸ், ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்வ தற்காக பிரதமர் மோடி சனியன்று தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். 6 நாட்கள் கொண்ட இந்த அரசு முறைப் பயணத்தில் மோடியின் பிரான்ஸ் பய ணம் 2 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள் ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட காலத் தில் அவர் ஸ்லோவேக்கியாவில் பயணம் மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் தொடங்கவுள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் உச்சிமாநாட்டின்’ (Bharat Innovates Summit) தொடக்க விழாவிற்கு முன்ன தாக, ஞாயிறன்று இந்தியா, பிரான்ஸ் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த தேர்ந் தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்கள், துணி கர மூலதன தலைவர்களுடன் கலந்துரை யாடினார்.

சயானி கோஷின் கட்சி பதவியை பறித்த மம்தா பானர்ஜி

மேற்குவங்க சட்டமன்றத் தேர்த லில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, கட்சிக்குள் உட்கட்சிப் பூசல், அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்தச் சூழ லில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்களான சயானி கோஷ், மாலா ராய் ஆகியோரை கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நீக்கியுள்ளார். ஜாதவ்பூர் தொகுதி எம்.பி. யான சயானி கோஷ், திரிணாமுல் இளைஞ ரணித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப் பட்டு, அவருக்குப் பதிலாக இளைஞர ணித் தலைவராக அர்ணவ் பானர்ஜி நிய மிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா தெற்கு தொகுதி எம்.பி.,யான மாலா ராய் திரிணாமுல் மகளிர ணித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப் பட்டு, அவருக்குப் பதிலாக காளிகஞ்ச் தொகுதி எம்எல்ஏ அலிபா அகமது நிய மிக்கப்பட்டுள்ளார்.

பதவி பறிக்கப்பட்ட இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் தலை வர் மம்தா பானர்ஜிக்கு மிக நெருக்கமான வர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவில் நன்கொடையை சாணத்தில் புதைத்து சூறையாடும் நிர்வாகம்

மோடி திறந்து வைத்த அயோத்தி ராமர் கோவி லுக்கு திருப்பதி போன்று நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு உண்டியல்கள், நன்கொடை மையங்கள் மூலம் சேரும் பணத்தைக் கணக்கிடும் மிக முக்கியப் பொறுப்பில் லவ்குஷ் மிஸ்ரா என்ற ஊழியர் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் கோவில் கணக்குகளில், உண்டியல் வசூலில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் லவ்குஷ் மிஸ்ராவின் வீட்டை காவல் துறையினர் ஞாயிறன்று சோதனை செய்த னர்.

வீட்டின் பல இடங்களில் தேடியும் ஆரம்பத்தில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் வீட்டின் பின்புறம் தொழு வப் பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குவித்து வைக்கப்பட்டி ருந்த மாட்டுச் சாணத்தின் அடியில் உள்ள ஒரு மூட்டையில் ரூ.12 லட்சம் இருப்பது தெரியவந்தது.

லவ்குஷ் மிஸ்ராவைக் கைது செய்தனர். இந்தத் திருட்டுச் சம்ப வத்தில் லவ்குஷ் மிஸ்ராவுக்கு மட்டுமே தொடர்பு உள்ளதா அல்லது கோவிலைச் சேர்ந்த வேறு சில உயரதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.