தீக்கதிர் துணை ஆசிரியர் ப.விஜயகுமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
12 Jun 2026, 9:25 pm

தீக்கதிர் துணை ஆசிரியர் ப.விஜயகுமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா

மதுரை,ஜூன் 12- தீக்கதிர் நாளிதழ் மதுரைப்பதிப் பில் துணை ஆசிரியராக பணியாற்றிய ப.விஜயகுமாருக்கு பணிநிறைவு பாராட்டுவிழா ஜூன் 11 வியாழனன்று தீக்கதிர் வளாகத்தில் நடைபெற்றது.

1981 ஆம் ஆண்டு தீக்கதிரில் பணி யில் சேர்ந்த ப.விஜயகுமார், பிழை திருத்துநராகவும் செய்திக்களஞ்சியம் பிரிவிலும் நீண்டகாலம் பணி யாற்றினார்.

பின்னர் ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்டு, துணை ஆசிரியராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தார். 45 ஆண்டு கள் தீக்கதிர் நாளிதழில் பணியாற்றி யுள்ளார்.

தோழர் ப.விஜயகுமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் தலை மையில் நடைபெற்றது. முன்னாள் ஆசி ரியர் வி.பரமேசுவரன், முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி ஆகி யோர் அவருக்கு சால்வை அணி வித்து நினைவுப்பரிசு வழங்கி, பாராட்டி பேசினர்.

சிறப்பு ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், முன்னாள் செய்தி ஆசிரியர் ப.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ப.விஜயகுமார் ஏற்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா மற்றும் தீக்கதிர் ஊழியர்கள் பங்கேற்றனர்.