திருப்பூரில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி
16 Nov 2025, 3:30 pm
<p><strong>திருப்பூரில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி</strong></p>
<p>திருப்பூர், நவ.16 திருப்பூரில் ஞாயிறன்று தீக்கதிர் சந்தா ஒப் படைப்பு மற்றும் நவம்பர் 23 ஆம் தேதி புரட்சி தின செந்தொண்டர் பேரணி ஆயத்த பேரவை நடைபெற்றது. திருப்பூர் பி.ஆர்.நிலையத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.செல்வதுரை தலைமை யில், 65 சந்தாக்களை மாநகர குழு உறுப்பி னர்கள் ஜி.செந்தில்குமார், ஏ.செல்லமுத்து, புஷ்பா நகர் செயலாளர் எஸ்.சரவணன் ஆகி யோர் ஒப்படைத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெயபால், தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தெற்கு மாநகர குழு உறுப்பினர் ஏ.ஷகிலா நன்றி கூறினார். கருவம்பாளையம் பகுதியில் நடைபெற் றதில் மாவட்ட குழு உறுப்பினர் பானுமதி தலைமை வகித்தார். 77 சந்தாக்களை மாநகர குழு உறுப்பினர் ஞானசேகர், கருவம்பாளை யம் வடக்கு கிளை செயலாளர் கோபால், முன் னாள் மாமன்ற உறுப்பினர் ஜி.ஈஸ்வர மூர்த்தி ஆகியோர் வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சந்தா தொகையை பெற்றுக்கொண்டு உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெயபால், தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.கணேசன் ஆகி யோர் உள்ளனர். வடக்கு ஒன்றியம் : நவம்பர் புரட்சி தின பேரணி திட்டமிடல் மற் றும் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி திருப் பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெருப் பெரிச்சல் கிளைகள் சார்பில் ஞாயிறன்று தோட்டத்துபாளையத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் கே. காமராஜர் பங்கேற்றனர்.</p>
