தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
18 Nov 2025, 3:21 pm
<p><strong>தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு</strong></p>
<p>அவிநாசி, நவ. 18- உழைக்கும் மக்களின் பேராயுதமான தீக்கதிர் நாளித ழுக்கான சந்தாக்களை அவி நாசி பகுதியில் வழங்கப்பட் டது. மார்க்சிஸ்ட் கட்சியின் நாளேடான தீக்கதிர் நாளித ழுக்கான சந்தா சேர்ப்பு இயக் கம் திருப்பூர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதி யாக, அவிநாசி வஞ்சிபாளையம் பகுதி சிபிஎம் கிளைகளின் சார்பில் தீக்கதிர் சந்தா ஒப்படைக்கும் பேரவை நடைபெற்றது. வஞ்சிபாளையம் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தியிடம் 20 தீக்கதிர் சந்தாக்களை கிளை தோழர்கள் ஒப்படைத்தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், பாலசுப்பிரமணியம் மற்றும் கிளைச் செய லாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் திரளா னோர் பங்கேற்றனர். மேலும் 70-க்கும் மேற்பட்ட சந்தாக்களை அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் கிளை செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் ஈஸ்வர மூர்த்தி மற்றும் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்து வருகின்ற னர். இதேபோன்று, சிஐடியு பனியன் சங்க சந்தாவை சிஐடியு பனியன் சங்க மாவட்டத் தலைவர் உன்னிகிருஷ்ணனிடம், சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் முத்துச்சாமியிடம் 52 உறுப்பினர் சந்தாவிற்கான தொகை ரூ.5,200 ஒப்படைத்தனர்.</p>
