தீக்கதிர் உலக செய்திகள்
5 Jun 2026, 7:59 pm

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வடகொரியா செல்கிறார்

சீன ஜனாதிபதி ஜின்பிங் ஜூன் இரண்டாம் வாரம் வடகொரியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள் ்ளார் என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதற்கு முன் 2019 ஜூன் மாதம் அந்நாட்டுக்குச் சென்றி ருந்தார். முக்கிய நட்பு நாடான வடகொரியாவுடன் உறவை வலுப்படுத்துவதற்காக சீனா எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைகிறது. அமெரிக்காவின் மிரட்டல் உள்ளிட்ட ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ள இந்த இரு நாடுகளின் உறவு வலுப்படுவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

லெபனான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்

லெபனான் மக்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் அந்நாடு ஆக்கிர மித்துள்ள லெபனான் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். லெபனான் உட்பட அனைத்துப்பகுதி யிலும் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனையாக உள்ளது. லெபனானுடன் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் தடுப்பூசி தயாரிப்பு : ரஷ்யா-கியூபா ஒப்பந்தம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவும் கியூபாவும் தங்களது அறிவியல் ரீதியிலான உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா தனது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள், பெப்டைட் தடுப்பூசிகள் மற்றும் ஆன்கோலிடிக் வைரஸ் அடிப்படையிலான தடுப்பூசிகளை வழங்க உள்ளது. அதே நேரத்தில், கியூபா தனது ‘ஹெபர்சாவேக்ஸ்’ என்ற புற்றுநோய்க் கட்டிகளை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பை பகிர உள்ளது.

ஆர்மீனியாவிற்கு நிதியுதவி : ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

ஆர்மீனியாவிற்கு சுமார் 50 மில்லியன் யூரோ (69.6 கோடி ரூபாய் ) நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகியுள்ளது. அந்நாட்டில் ஜூன் 7 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு சில நாட்களுக்கு முன்பு, அந்நாட்டுப் பிரதமர் நிகோல் பாஷினியானுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் தெரிவித்துள்ளார். ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் என இரு தரப்பிடம் ஒருங்கிணைப்பை நோக்கி நகர்ந்து வரும் பாஷினியானின் ‘சிவில் காண்ட்ராக்ட்’ கட்சிக்கு 32 சதவிகிதம் ஆதரவு இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எபோலா பாதிப்பு 381 ஆக உயர்வு

காங்கோவில் எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 381 ஆக அதிகரித்துள்ளது. அதில் 63 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் ரோஜர் காம்பா தெரிவித்துள்ளார்.மேலும் தற்போது 233 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது 4,000-க்கும் மேற்பட்ட பரிசோதனை உபகரணங்கள் வந்ததைத் தொடர்ந்து, நாட்டின் பரிசோதனைத் திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாதிரிகளையும் பரிசோதித்து, 24 மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்க உதவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தூண்டி விட்ட போரால் 4.5 கோடி மக்கள் பஞ்சத்தில் சிக்கும் அபாயம்

நியூயார்க், ஜூன் 5- அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் போரினால் 4.5 கோடி மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்கள் கிடைக்காமல் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான போரால் உருவாகியுள்ள எரிசக்தி மற்றும் உணவு அதிர்ச்சி (தட்டுப்பாடு) குறித்து ஐ.நா-வின் உலக உண வுத் திட்டம் (WFP) மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் தான் இந்த தட்டுப்பாடு காரணமாக உலகளவில் சுமார் 4.5 கோடி மக்கள் பசியால் வாடும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று எச்சரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதே உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் முக்கியப் புள்ளியாக உள்ளது. ஜூலை மாதம் வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அல்லது அதற்கு மேல் நீடித்தால், அது பேரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும் என்றும் அந்த அமைப்பின் செயல் நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ் குறிப்பிட்டுள்ளார். பல நாடுகளில் எரிசக்தி விலை உயர்வின் காரணமான உணவின் விலைகள் உயர்ந்துள்ளன. ஏழை நாடுகளில் உள்ள மக்கள் ஏற்கெனவே தங்களின் முழுப் பணத்தையும் உண வுக்காகவே செலவழித்து வருகிறார்கள். ஆப்கானிஸ்தான், லெபனான், சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் உள்ள மக்களின் நிலையோ மிக மோசமாக உள்ளது. எரிசக்தி விலை உயர்வுடன் உரத்தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் பயிர் நடவு செய்யும் காலம் துவங்கியுள்ளது. மழைக்காலமும் வரவுள்ளது, இச்சூழலில் உரத்தட்டுப்பாடும் அதிகரித்து வருவதால் விவசாய உற்பத்தி குறைந்துவிடும். இது மக்களை பட்டினியிலும் பஞ்சத்திலும் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தும் என கார்ல் ஸ்காவ் எச்சரித்துள்ளார்.

குவைத் விமான நிலையத் தாக்குதல் : அமெரிக்காவின் ஏவுகணையே காரணம் என ஈரான் விளக்கம்

டெஹ்ரான், ஜூன் 5- குவைத் சர்வதேச விமான நிலை யத்தின் மீதான தாக்குதலுக்கு நாங் கள் காரணமல்ல என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மறுத்துள்ளது. மேலும் அந்தத்தாக்குதலுக்கு கார ணம் அமெரிக்காவின் ஏவுகணைதான். குவைத் பயன்படுத்தும் அமெரிக்க தயாரிப்பான ஏவுகணை தடுப்பு எதிர்ப்பு அமைப்பான ‘பேட்ரியாட்’ (Patriot) செயலிழந்தது. இதனால் ஈரானின் ஏவுகணைகளை அது இடைமறித்து தாக்க தவறி விமான நிலைய முனை யத்தின் மீது விழுந்தது எனவும் கூறி யுள்ளது. போர் நிறுத்தத்தை மீறி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி யதை தொடர்ந்து மேற்கு ஆசிய பிராந்தி யத்தில் மீண்டும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்திய நிலையில் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் ‘டி1’ கட்டடம் மீது ஈரான் ஜூன் 3 அதி காலை ஏவுகணை டிரோன் ஏவி தாக்கு தல் நடத்தியதாக குற்றம் சாட்டப் பட்டது. இத்தாக்குதலில் இந்தியர் ஒரு வர் உயிரிழந்தார். மேலும் 63 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குத லுக்கு குவைத் அரசை குற்றம் சாட்டிய நிலையில் ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.