தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் வாட்ஸ்அப் பேச்சுப் போட்டி சிதம்பரத்தில் பரிசளிப்பு விழா

1 hour before
தீக்கதிர் வாட்ஸ்அப் பேச்சுப் போட்டி சிதம்பரத்தில் பரிசளிப்பு விழா

தீக்கதிர் வாட்ஸ்அப் பேச்சுப் போட்டி சிதம்பரத்தில் பரிசளிப்பு விழா

சிதம்பரம், செப். 24-சிதம்பரத்தில் தீக்கதிர் நாளிதழ் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வாட்ஸ்அப் பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழாசிறப்பாக நடைபெற்றது.தீக்கதிர் நாளிதழை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும்நோக்கில், கடலூர் மாவட்டத்தில் உள்ளபள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம்பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.மாணவர்கள் அனுப்பிய வாட்ஸ்அப் வீடியோக்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும்கல்லூரிப் பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினர் பரிசீலித்து, சிறப்பாகப் பேசிய மாணவர்களைத் தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புத்தகத்தொகுப்பு மற்றும் சான்றிதழ்களும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் மற்றும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் மாலைக்கட்டி தெருவில் உள்ள ஆறுமுக நாவலர் நிலையத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமுஎகசகடலூர் மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.ராகவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பாரதி தமிழ்முல்லை வரவேற்றார். தீக்கதிர் செய்தியாளர்அ.காளிதாஸ் பரிசளிப்பு விழாவின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்ளாக தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் எழுத்தாளர் களப்பிரன், தீக்கதிர்ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத் தலைவர் டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டுமாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.

மேலும், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜான

கிராஜா, சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், மருத்துவர் அருள்மொழிச்செல்வன், சி.கொத்தங்குடி ஊராட்சித் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியை ஈஸ்வரி, தமுஎகச சிதம்பரம் நகரத் துணைத் தலைவர் டி.மகாலிங்கம், வீராணம் ஏரி ராதா மதகு பாசன சங்கத் தலைவரும் இயற்கை வேளாண் விவசாயியுமான எஸ்.ரங்கநாயகி,அண்ணா மலைப் பல்கலைக்கழகப் பணி நிறைவு பெற்ற பேராசிரியர் ஞானகுமார், சிதம்பரம் அரசுகலைக் கல்லூரி துணைப்பேராசிரியர் தி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் கவிஞர் பால்கி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நகரத் துணைத் தலைவர் என்.கலியமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.