பல்லாவரம், வேளச்சேரி, நெய்வேலியில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு
16 Jul 2026, 8:59 pm
<p><strong>பல்லாவரம், வேளச்சேரி, நெய்வேலியில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு</strong></p><p>சென்னை, ஜூலை 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில், தீக்கதிர் நாளித ழுக்கான சந்தா சேகரிப்பு இயக்கம், மாநிலம் முழுவதும் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட சந்தாக்கள் தற்போது ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பல்லாவரம் பகுதிக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 60 சந்தாக்களை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் பகு திச் செயலாளர் எம். தாமோதரன் புத னன்று (ஜூலை 15) வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி. பிரபாகரன், ஜி. விஜயலட்சுமி எம்.சி., பகுதிக்குழு உறுப்பினர்கள் எம். சந்திரன், முனைவர் ரேவதி மற்றும் ஜானகி ராமன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 39 சந்தாக் களை சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணனி டம், பகுதிச் செயலாளர் எஸ். முக மது ரபி வழங்கினார். தென்செ ன்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே. வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர் எஸ். குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி யில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செய லாளர் கோ. மாதவன் ஆகியோர் சந்தாக்களை பெற்றுக்கொண்டனர். நெய்வேலி ஏரியா கமிட்டி செயலாளர் ஆர். பாலமுருகன் 21 தீக்கதிர் சந்தா வழங்கினார். மின்னரங்க இடைகமிட்டி செயலாளர் என். தேசிங்கு 15 தீக்கதிர் சந்தாக்களை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திரு அரசு, நெய்வேலி சங்க பொருளாளர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
