தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு உற்சாகத்துடன் பங்கேற்ற நிர்வாகிகள்

10 Jul 2026, 9:48 pm
புதுச்சேரியில் தீக்கதிர்  சந்தா சேர்ப்பு  உற்சாகத்துடன் பங்கேற்ற நிர்வாகிகள்
<p><strong>புதுச்சேரியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு உற்சாகத்துடன் பங்கேற்ற நிர்வாகிகள்</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 10- உழைக்கும் மக்களின் குரலாகவும், அவர்களின் கோரிக்கைகளை அதிகார வர்க்கத்திடம் கொண்டு சேர்த்து தீர்வு காணும் ஊடகமாகவும் விளங்கும் &#39;தீக்கதிர்&#39; சந்தா சேர்ப்பு இயக்கம், புதுச்சேரியில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, மதகடிப்பட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர் சங்கர், கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம், முத்து, தட்சிணாமூர்த்தி மற்றும் கிளைச் செயலாளர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர். இந்தச் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் மூலம் மதகடிப்பட்டு, திருபுவனை மற்றும் திருவண்டார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் திரளான மக்கள் &#39;தீக்கதிர்&#39; ஓராண்டு மற்றும் அரையாண்டு சந்தாக்களைப் பதிவு செய்தனர். மேலும், நாளிதழின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியையும் ஆர்வமுடன் மக்களிடமிருந்து நிர்வாகிகள் வசூலித்தனர். உழைப்பாளி மக்களின் ஆதரவுடன் இந்த சந்தா சேர்ப்பு இயக்கம் இப்பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.