தமிழகம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரம்!
3 Jul 2026, 9:05 pm

தமிழகம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரம்!

தமிழ்நாடு முழுவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் ஜூலை 1 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக, தென்சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற தயாரிப்புக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி பேசினார். அப்போது அவரிடம் 35 சந்தாக்கள் வழங்கப்பட்டன. தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே. வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர்கள் எஸ். குமார், ச. லெனின், எம். தாமு ஆகியோர் பங்கேற்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேகரிக்கும் இயக்கம் நடைபெற்றது. இந்த சந்தா சேகரிப்பில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ, நாகர்கோவில் மாநகரச் செயலாளர் எஸ். அருணாசலம், ராஜாக்கமங்கலம் ஒன்றியச் செயலாளர் டி. ராஜகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளருமான என். பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். கோமதி, தாலுகா செயலாளர் ஆர். அர்ஜுனன், மூத்த தோழர்கள் எஸ்.என். மயில்சாமி, கே. குப்புசாமி மற்றும் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.