கடலூர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம்
5 Jul 2026, 1:40 am
<p><strong>கடலூர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம்</strong></p><p>கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் தீக்கதிர் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்துவதற்கான தீவிர சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் கலந்துகொண்டு, வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் தீக்கதிர் சிறப்புகளை விளக்கி சந்தாக்களைப் பெற்றார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உடனிருந்து இப்பணியை முன்னின்று நடத்தினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய தீவிர சந்தா சேகரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>
