தீக்கதிர் முக்கிய செய்திகள்
24 May 2026, 8:26 pm

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

பிரதமர் மோடி ரூ.8,000 கோடி மதிப்பிலான விமானத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வேளையிலும், வெளிநாட்டுப் பயணங்களுக்கும் உலகத் தலைவர்களை வரவேற்பதற்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளைச் செலவிடும் போதும், இந்தியாவில் உள்ள குழந்தைகள் இன்னும் ஒரு சொட்டுத் தண்ணீருக்குக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகையாளர் அர்பா கானம் ஷெர்வானி

தில்லியின் பீதாம்புராவில் மதராஸா சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறி பாஜக எம்எல்ஏ கர்னைல் சிங் நேரடியாக சுவர்களை இடித்துள்ளார். பாஜக தலைவர்கள் பகிரங்கமாகச் சட்டத்தை மீறுகிறார்கள். இஸ்லாமியர்கள் இலக்காக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இருப்பினும் இத்தகைய ஆழமான வகுப்புவாதச் சம்பவங்கள், செய்திகளாக மாறுவதில்லை.

பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா

இந்தியாவில் தங்களை வழக்கறிஞர்கள் என்று கூறிக்கொள்பவர்களில் 35% முதல் 40% வரை போலி வழக்கறிஞர்கள் ஆவர். இதுகுறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.

வடகிழக்கு ஊடக யூனியன்

கரப்பான் பூச்சி கட்சியில் இருப்பவர்கள் கூட்டணிக் கட்சியினர் என்றும், எளிதாக ஏமாற்றிவிடலாம் என்றும் பாஜக நினைக்கிறது. ஆனால் கரப்பான் பூச்சி கட்சியில் உள்ளவர்கள் நன்கு படித்தவர்கள். ஒரு சமூகவலைதள கணக்கை நீக்கி பாஜக “கரப்பான் பூச்சிகளை” ஒடுக்க முயற்சித்தது. ஆனால் இதன்விளைவு நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் தனி சமூக வலைதள கணக்குகள் மூலம் கரப்பான் பூச்சி கட்சி வளர்ந்து வருகிறது.