தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் நாளிதழின் கோவை பதிப்பின் சொந்த கட்டடம்

3 Jul 2026, 12:51 am
தீக்கதிர் நாளிதழின் கோவை பதிப்பின் சொந்த கட்டடம்
<p>தீக்கதிர் நாளிதழின் கோவை பதிப்பின் சொந்த கட்டடம் கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வியாழனன்று நேரில் பார்வையிட்டு, பொறியாளர் சிந்தனிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, நவம்பர் மாதத்தில் திறப்புவிழா செய்வது என தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், வி.இராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பாண்டியன், ஜோதிமணி, தி.மணி, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர்.பூபதி, தீக்கதிர் டிஜிட்டல் பதிப்பின் ஆசிரியர் எம்.கண்ணன், கோவை பதிப்பு மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், செய்தி ஆசிரியர் அ.ர.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் கீரணம் குணா - கே.ஜெயந்தி இல்லத் திருமண வரவேற்பு விழா கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதனன்று நடைபெற்றது. இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கலந்துகொண்டு மணமக்கள் ஜி.ஜே.பாரதி - எம்.மேகா ஆகியோரை வாழ்த்தி பேசினார். உடன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விசா மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோபால், கே.எஸ்.கனகராஜ், வி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.