முந்தய பக்கம்

தேடி வந்து சொல்லுங்கடா!

9 May 2026, 2:14 pm
தேடி வந்து  சொல்லுங்கடா!

தேடி வந்து சொல்லுங்கடா!

மனிதன் குடிக்கிற தண்ணீரில் மலத்தையும் தான் கலக்கிறான் மயானம் போகிற பிணத்தையும் குறுக்கே நின்னு மறைக்கிறான் குளத்துக்குக் குளிக்கப் போனால் குறுக்கே வந்து தடுக்கிறான் அவன் குலசாமி மாடு மாதிரியே தினம் முறைச்சுக்கிட்டே திரிகிறான்... (மனிதன்)

பாட்டன் பூட்டன் சொத்தையெல்லாம் பகட்டுப் பண்ணிப் புடுங்கிக்கிட்டான் இப்போ பேண்ட் சட்டை போட்டுப் போனா “என்னடா பந்தாவா...?” என்று கேட்கிறான் பொது இடத்துக்கு நாங்க போனால் பொத்துக்கிட்டு கோவம் வருது தானா நாண்டுக்கிட்டுச் சாவுங்கடா நல்ல செய்தி அது தானடா... (மனிதன்)

பள்ளிக்கூடம் போகும் போது பாதை இல்லையென்று மறிக்கிறான் பட்டம் வாங்கி வேலைக்குப் போனா “என்ன திமிரா...?” என்று முறைக்கிறான் உண்மையாக உழைத்து நாங்கள் உயர்ந்து முன்னுக்கு வந்தால் வம்புச் சண்டை போட அவன் வலிய வரிந்துகட்டி நிற்கிறான்... (மனிதன்)

கோவிலுக்குப் போனோமென்றால் “போ வெளியே...” என்று தடுக்கிறான் கும்பிடுவதற்குத்தானே சாமி என்றால் குறுக்கே வந்து நின்று மறைக்கிறான் நான் உண்டியலில் போட்ட காசைத்தான் அவன் ஓடி வந்து பொறுக்குகிறான் அந்தச் சல்லிக் காசை எண்ணித்தானே அவன் தலைமுறையை வளர்க்கிறான்... (மனிதன்) காசு பணம் ஒண்ணும் பெருசில்லை சுனாமி சொல்லும் கதைகள் பல இதை மனதில் வையுங்கடா மண்டுகளா இந்த மண்ணுக்குன்னு ஒண்ணு வந்தால் மொத்தப் பேருக்கும் ஒத்தக் குழிதானடா ‘கெத்தா...’ செத்தப் பின்னே சாதி வருமா தேடி வந்து சொல்லுங்கடா தேசம் காக்கப் போறோமடா... (மனிதன்)

- ஆம்பல் காமராஜ்

Share
FacebookXWhatsAppTelegram