தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊதிய உயர்வு கேட்டு மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் மனு

yesterday
ஊதிய உயர்வு கேட்டு மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் மனு

ஊதிய உயர்வு கேட்டு மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் மனு

நாமக்கல், ஜூன் 22- ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மக்களைத்தேடி மருத் துவ ஊழியர் சங்கத்தினர் திங்களன்று மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். அந்த ஊழியர்களுக்கு வீடு வீடாக சென்று மருந்து பெட்டகம் வழங்கு தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு வருகி றது. கடந்த 2026 மே 1 ஆம் முதல் ஒப்பந்த ஊழியர்கள் 42 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என கடந்த திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், சொன்ன படி ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. பெண்கள் நல அரசாங்க தங்களை அடை யாளப்படுத்திக் கொள்ளும் தமிழக அரசு, மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊதி யம் வழங்க வேண்டும். பணி உத்தரவாதத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு மக்களைத் தேடி மருத்துவர் ஊழியர் சங்கத்தினர் திங்க ளன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். சங்கத்தின் மாவட் டத் தலைவர் லதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிஐடியு மாவட்டச் செயலா ளர் என்.வேலுச்சாமி, சங்கத்தின் நிர்வாகி கள் மாலதி, புனிதா, சத்யா, ஜெயபாரதி, கலை வாணி, மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவை

கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் எஸ்.மகாலட்சுமி, துணைச்செயலாளர் என்.ரேவதி பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரேவதி தலைமையில் மனு அளிக்கப்பட் டது. மாவட்ட துணைச்செயலாளர் மணிமேகலை, பொருளா ளர் கே.புவனேஸ்வரி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

2 மாதமாக சம்பளம் வழங்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து, மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தி னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலாம் பிகா தலைமையில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதன்பின் ஆட்சியர் இளம் பகவத்தை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.