உலகம் சோசலிசத்தை நோக்கி முன்னேற விரும்புகிறது - பேரா.விஜய் பிரசாத்
29 Nov 2025, 1:28 pm

உலகம் சோசலிசத்தை நோக்கி முன்னேற விரும்புகிறது

இன்று உலக அரசியல் களம் ஒரு விசித்திரமான இருண்மைக்கு ஆளாகியுள்ளது. ஒருபுறம் நவ-பாசிசம் மற்றும் தீவிர வலதுசாரிகளின் காட்டுமிராண்டித்தனம் தலைவிரித்தாடுகிறது. மறுபுறம், அவர்களை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு “புதுப்பிக்கப்பட்ட தாராளவாதிகள்” மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் தங்களை நாகரிகத்தின் பாதுகாவலர்களாக முன்னிறுத்து கின்றனர். ஆனால், இவர்களை நாம் “உயி ரற்ற பிணங்கள்” (Zombies) என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், இவர்களின் முன்னோர்கள் அனைவரும் நவதாராளவா தத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும், கடன் கொள்கைக்கும் சரணடைந்து, தங்கள் கொள்கைகளை கைவிட்டதால் அதன் எச்சத்தில் இருந்துதான் தீவிர வலதுசாரிகள் கிளர்ந்தெழுந்தனர்.

பழைய தாராளவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு நான்கு விபரீதமான கருத்துக்களை - உண்மை என-மனதார ஏற்றுக்கொண்டனர்: 1. முதலாளித்துவம் நித்தியமானது: இதற்கு மாற்று ஏதுமில்லை. 2.நவதாராளவாதக் கொள்கைகள் தவிர்க்க முடியாதவை: இவை தீவிர ஏற்றத்தாழ்வு களை உருவாக்கினாலும், இவற்றை மீற முடியாது. 3.சமூக மாற்றத்திற்கான எல்லை: இனம், பாலினம் போன்ற குறிப்பிட்ட சமூகப் படி நிலைகளைச் சரிசெய்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆழமான பொருளா தார மாற்றத்துக்குச் செல்லக் கூடாது. 4.சோசலிச பயம்: இதற்கு மேல் செல்வது தோல்வியடையவோ அல்லது ஃபிரெட்ரிக் ஹயேக்கின் எச்சரிக்கைப்படி “அதிகா ரத்துவம்” மற்றும் “சர்வாதிகாரத்தை” உரு வாக்கவோ வழிவகுக்கும்.

இந்தச் சரணாகதிதான் வலதுசாரிகளுக்குக் களம் அமைத்தது. தீவிர வலதுசாரிகள் ‘மக்கள் விரோதக் கொள்கைகளை வெறுக்கி றார்கள்’ என்ற பாவனையில் வந்து, குடியேற்ற எதிர்ப்பையும் இனவாதத்தையும் கையில் எடுத்தாலும், பொருளாதார ரீதியாக அவர்களி டமும் எந்த மாற்றுத் திட்டமும் இல்லை. அவர்கள் தாராளவாதத்தின் சிக்கனக் கொள்கை களையும், கடுமையான சமூக ஒடுக்குமுறை யையும் ஒருசேரச் செயல்படுத்தவே முனை கிறார்கள். “ஜோம்பி தாராளவாதத்தின்” மாயைகள் அதே போல, ‘புதுப்பிக்கப்பட்ட தாராளவா திகளும்’ முன்னோர்களின் தோல்வியைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் “முற்போக்கு முதலாளித்துவம்” (Progressive Capitalism) அல்லது “தொ ழில்நுட்ப நிலப்பிரபுத்துவம்” போன்ற புதிய கோஷங்கள் அனைத்தும் பழைய ஏமாற்று வேலைகளே. இது “ஜனநாயக” மற்றும் “சரி யான போட்டிமிக்க முதலாளித்துவம்” என்று ஒரு பொற்காலம் இருந்ததாக ஏக்கம் கொள்கி றது.

ஆனால் முதலாளித்துவப் போட்டி எப்போ துமே ஏகபோகத்தை நோக்கியே நகரும். வர்க்கச் சுரண்டலை மீறி அது பொதுமக்க ளுக்கு எந்த உரிமையையும் உருவாக்காது. உண்மையில், 1945 முதல் 1973 வரை யிலான முதலாளித்துவத்தின் “பொற்காலம்” என்பது, மூன்றாம் உலக நாடுகளின் உழைப்பையும், வளங்களையும் கடுமையான அளவில் சுரண்டி, அந்நாடுகளின் இறை யாண்மையைக் குலைக்கும் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் மூலம் (1953 ஈரானில் இருந்து 1973 சிலி வரை) கட்டமைக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகள் கோரிய “புதிய சர்வதேசப் பொரு ளாதார ஒழுங்கை” (New International Economic Order) ஐக்கிய நாடுகள் மன்றத் தில் நிராகரித்ததன் மூலமும், சர்வதேச நாணய நிதியம் வழியாக கடன் சுமையை ஏற்றியதன் மூலமும்தான், உலக வடக்குப் பகுதியின் சொத்து குவிக்கப்பட்டது.

இன்றளவும், உலக தெற்குப் பகுதியில் இருந்து மூலதனம் கப்பமாக (Tribute) வடக்கில் உள்ள நிதி நிறுவனங்களுக்குப் பாய்ந்துகொண்டி ருக்கிறது. தாராளவாதத்தின் கருப்புப் பக்கம் தத்துவார்த்த ரீதி யிலும் தாராளவாதத் திற்குச் சிக்கல்கள் உள்ளன. ஜான் லாக் போன்ற தாராளவாதத்தின் தூண்கள், மன்னரின் கொடுங்கோன்மைக்கு எதிராகச் சொத்து ரிமை கொண்டவர்களை “ஆளுநர்களாக” அறிவித்தனர். ஆனால் இந்தத் தாராளவாதமே இனவெறி கொண்டது. ஜான் லாக், பூர்வகுடி மக்கள் மீதான நிலப்பறிப்பையும், ஆப்பிரிக்க அடிமைமுறையையும் நியாயப்படுத்தினார். அவர் அடிமை வர்த்தக நிறுவனத்தில் முதலீட்டாளராக இருந்தார். இதன் அடிப்படையில்தான் காரல் மார்க்ஸ், தாராளவாதத்தின் மீதான தனது விமர்ச னத்தை முன்வைத்தார். அவர் அரசியல் விடு தலை (Political Emancipation) ஒரு முக்கி யமான முன்னேற்றம் என்றாலும், அதுவே மனித விடுதலை அல்ல என்றார். தனியார் சொத்துரிமையின் வரம்புகளைக் கடந்து செல்லாதவரை, சுதந்திரம், சமத்துவம் போன்ற நல்ல நோக்கங்கள் கூட சுரண்டலுக்கு வழி வகுக்கும் என்றார்.

முதலாளித்துவ அமைப் பில், ஒவ்வொருவருக்கும் ‘சொத்துரிமை கொண்டிருக்கச் சுதந்திரம்’ (Freedom to own property) கிடைக்கிறது. ஆனால், பெரும் பான்மை மக்களுக்குச் சொத்தின் ‘ஆதிக்கத்தி லிருந்து விடுதலை’ (Freedom from property) கிடைப்பதில்லை. தனியார் சொத்து டைமையைக் கடந்து, சோசலிசச் சமுதா யத்தை உருவாக்கும்போதுதான் மனித விடுதலை சாத்தியமாகும் என்பது மார்க்ஸின் கூற்று. ஏழை நாடுகளில் புரட்சி ஏன் வெடித்தது? இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தைச் சேர்ந்த மார்க்சியவாதிகள், தொழில்மயமான மேற்கத்திய நாடுகளின் தொழிலாளர் வர்க்கமே புரட்சியை முன்னெடுக்கும் என்று நம்பினர். ஆனால் லெனின் இதை மறுத்தார். ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் சுரண்டல் லாபத்தைப் பயன்படுத்தி, உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் “மேல்தட்டிற்கு” (Labour Aristocracy) சலுகை கொடுத்து, அவர்களை முதலாளித்துவத்தின் பக்கம் இழுத்துவிட்டனர். இதனால், ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம் போன்ற காலனித்துவப் பிடியில் இருந்த நாடுகளில்தான் புரட்சி வெடித்தது. இங்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டணி அமைத்துத் தங்கள் விடுதலைக்கான பாதையை உருவாக்கினர். மேற்கத்திய நாடுகளைப் போல சட்டம் மற்றும் அரசியல் மீதான ‘தாராளவாதப் பூச்சு’ (Liberal Patina) இந்த நாடுகளில் இல்லாததால், அவர்களால் புதிய சோசலிசக் கலாச்சாரத்தை உருவாக்க முடிந்தது. சோசலிசத்தைக் கட்டமைப்பதன் சிரமங்கள் இந்த ஏழை நாடுகள் சோசலிசத்தைக் கட்டியெழுப்பும்போது நான்கு முக்கியமான சவால்களை உடனடியாகச் சமாளிக்க வேண்டி யிருந்தது.

1. புரட்சியைப் பாதுகாத்தல்: உள்நாட்டிலும் வெளியிலிருந்தும் வரும் எதிர்ப்புரட்சிச் சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளு தல். உதாரணமாக, 1918-இல் ரஷ்யா தாக்கப்பட்டதும், 1962 முதல் கியூபா முற்று கையிடப்பட்டதும், இன்று சீனா அச்சுறுத் தப்படுவதுமே இதற்குச் சான்று. தாராளவாத அரசுகள், பிறப்பிலிருந்தே இந்த அரசுகளை நசுக்க முயன்றன. 2.மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்: பசி, வறுமை போன்ற அன்றாட அவமானங்களை வேகமாகப் போக்க, சமூகத்தின் வரையறுக்கப்பட்ட வளங்களை அதிகபட்ச உழைப்பைக் கொண்டு புதிய முறையில் பயன்படுத்த வேண்டியிருந்தது.

3.உற்பத்திச் சக்திகளை உருவாக்குதல்: காலனித்துவத்தால் அழிக்கப்பட்ட உள் கட்டமைப்பை (மின்சார வசதி, போக்குவரத்து) மீண்டும் உருவாக்க வேண்டியிருந்தது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில் மயமாக்கலுக்குத் தேவையான மூலதனம் அண்டை நாடுகளின் உதவியாலும், உள் நாட்டு வளங்களின் விரைவான குவிப்பா லும் உருவாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது.

4.புதிய கலாச்சார உலகைப் படைத்தல்: எழுத்தறிவின்மையை நீக்கி, தொழிலாளர்க ளும் விவசாயிகளும் தங்கள் நாட்டின் தலை விதியைத் தாங்களே தீர்மானிக்கும் நம்பிக்கையையும் கண்ணியத்தையும் உருவாக்குவது ஒரு நீண்ட காலத் திட்டமாக இருந்தது. இந்தச் சோசலிசப் பரிசோதனைகள் அனைத்தும் “சுதந்திரமான சூழலில்”

இருந்து நடக்கவில்லை; மாறாக “தேவையின் பிடியில்” (Realm of Necessity) இருந்து போராடின. அமெரிக்காவால் குண்டுமழை பொ ழியப்பட்டு, மண் விஷமாக்கப்பட்ட வியட்நாம் போன்ற ஒரு நாட்டில் சோசலிசத்திற்கு உடனடி யாக மாறுதல் சாத்தியமில்லை. இந்த சோசலிச நாடுகள் பல தவறுகளை இழைத்திருக்கலாம். ஆனால், அந்தத் தவறுகள் சோசலிசத்திற்குத் தனித்துவமானவை அல்ல; அவை வறுமை க்கு மத்தியில் புதிய அமைப்பைக் கட்டமைக்க நடந்த போராட்டத்தால் பிறந்தவை. முதலா ளித்துவத்திற்குப் பிந்தைய ஒரு உலகத்திற் கான சோதனைகளாக அவற்றைப் பார்க்க வேண்டும். மன்த்லி ரிவியூ இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம்: எஸ்.பி.ஆர்.