தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உலகப் புகழ்பெற்ற “மொரோவியன் கிறிஸ்துமஸ் ஸ்டாரும் தரங்கம்பாடியும்”

7 Dec 2025, 3:52 pm
உலகப் புகழ்பெற்ற “மொரோவியன் கிறிஸ்துமஸ் ஸ்டாரும் தரங்கம்பாடியும்”
<p><strong>உலகப் புகழ்பெற்ற &ldquo;மொரோவியன் கிறிஸ்துமஸ் ஸ்டாரும் தரங்கம்பாடியும்&rdquo;</strong></p> <p>மயிலாடுதுறை, டிச. 7 - உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்ட நிலையில், இயேசு கிறிஸ்து வின் பிறப்பைக் குறிக்கும் நட்சத்தி ரங்கள் (ஸ்டார்கள்) வீடுகளில் ஒளிர விடப்பட்டு மகிழ்ச்சி பறைசாற்றப்படு கிறது. விதவிதமான ஸ்டார்கள் இருந்தாலும், ஜெர்மனியின் மொரோ வியன்ஸ் பகுதியில் உருவான மொரோவியன் ஸ்டார்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. மொரோவியன் ஸ்டாரின் வரலாற்றுத் தொடர்பு சுமார் 260 ஆண்டுகளுக்கு முன்பே, டென்மார்க் கட்டுப்பாட்டில் தரங்கம்பாடி இருந்தபோது, 1760-களில் ஜெர்மனியின் மொரோ வியன் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்கள் தரங்கம்பாடிக்கு மேற்கே 1.5 கி.மீ. தொலைவிலுள்ள சாத்தங்குடி கிராமத்தில் தங்கி யிருந்தனர். அவர்கள் விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்களில் திறமை பெற்றிருந்தனர். அப்போதுதான், மொரோவியன் ஸ்டார்களை இந்தியாவில் முதன் முறையாகத் தயாரித்து அறிமுகப் படுத்தியவர்கள் இவர்கள்தான். தரங்கம்பாடி, பொறையார், மயி லாடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளுக் கும், தாங்கள் சென்ற இடங்களுக்கும் இந்த ஸ்டார்களைப் பரப்பினர். அன்று முதல் இன்று வரை, தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள &nbsp;பாரம்பரிய ஆலயங்கள், கட்டி டங்களில் இந்த மொரோவியன் ஸ்டார்கள் ஒளிர்வது தொடர்கிறது. இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகும், கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவை பயன்படுத்தப் பட்டாலும், இவை முதன்முதலில் தரங்கம்பாடியில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்குப் பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பாரம்பரியக் கலையைக் காக்கும் பாக்யராஜ் தரங்கம்பாடியின் இந்த பாரம்பரிய மொரோவியன் ஸ்டார் தயாரிப்புக் கலையை இன்றளவும் காத்து வருபவர் சமாதானம் பாக்ய ராஜ். கடந்த 1980-களில் தமிழறிஞர் சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தின் இயக்குநராகப் பணியாற்றிய மறைந்த பிஷப் ஜான்சனின் துணைவி யான ஜெர்மனியைச் சேர்ந்த ஈவா மரியா சீபெர்ட் ஜான்சன் அவர்கள், தனது வீட்டில் வைத்திருந்த மொரோவியன் ஸ்டாரையும், அதன் செய்முறையையும் பாக்யராஜுக்குக் கற்றுத் தந்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தொய்வின்றி மொரோவியன் ஸ்டார்களைத் தயாரித்து, விரும்பி கேட்பவர்களுக்கு குறைந்த விலை யில் கொடுத்து வருகிறார் சமாதானம் பாக்யராஜ். தற்போது அவரது மனைவியும் இந்தக் கலையைக் கற்று, அவருக்கு உதவியாக இருக்கிறார். பிளாஸ்டிக் இல்லாத மொரோவியன் ஸ்டார் தற்போது சந்தையில் கிடைக்கும் ஸ்டார்கள் பெரும்பாலானவை பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் செய்யப்படும் நிலையில், சமாதானம் பாக்யராஜ் தயாரிக்கும் இந்த மொரோவியன் ஸ்டார்கள் முற்றிலும் காகித அட்டைகளாலேயே செய்யப்படுகின்றன. இதன் மூலம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மேலும், ஆர்வ முள்ள பல இளைஞர்களுக்கு இந்தக் கலையை அவர் கற்றுத் தருகிறார். பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி வெறும் காகிதத்தால் செய்யப்படும் இந்த பாரம்பரிய மொரோவியன் ஸ்டார் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு கடனுதவி வழங்கினால், இது விழாக் காலங்களில் வருமானம் ஈட்டும் தொழிலாக அமையும். ஜெர்மனிக்கும் தரங்கம்பா டிக்கும் இடையேயான இந்த வர லாற்றுச் சுவடுகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். &nbsp;தரங்கம்பாடியின் வரலாற்று அடை யாளங்களில், &ldquo;மொரோவியன் ஸ்டாரின் வரலாறும் அழிக்க முடியாத ஒன்று!&rdquo; &nbsp;- ஜான்சன்&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.