குறைந்தபட்ச ஆதார விலைகூட கிடைக்கவில்லை; மக்காச்சோள விவசாயிகளுக்கு கடும் இழப்பு! அரசு தலையிட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
12 Feb 2026, 3:51 pm
<p><strong>குறைந்தபட்ச ஆதார விலைகூட கிடைக்கவில்லை; மக்காச்சோள விவசாயிகளுக்கு கடும் இழப்பு! அரசு தலையிட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, பிப். 12 - மக்காச்சோளம் விலை, எப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழக அரசு தலையிட்டு உரிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: ஆதார விலை ரூ. 2,435; கிடைப்பதோ ரூ. 835 தமிழ்நாட்டில் 17-க்கும் மேற்பட்ட மாவட் டங்களில் பரவலாக விவசாயிகள் மக்காச் சோள சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டு மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்து, விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஒன்றிய அரசு ஒரு குவிண்டால் மக்காச் சோளத்திற்கு ரூ. 2435 குறைந்தபட்ச ஆதார விலையாக அறிவித்துள்ளது. ஆனால் விவ சாயிகளுக்கு அரசு அறிவித்த விலை கிடைப்ப தில்லை. தற்போது தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.1600 முதல் ரூ. 1800 வரை தான் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இடைத்தரகர்களை வைத்து பல நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையை விட ரூ. 835 என்ற விலைக்கு மிகக் குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். இடைத்தரகர்கள் வியாபாரிகள் சிண்டிகேட் தமிழ்நாட்டில் இரண்டு பருவங்களிலும் சேர்த்து 30 லட்சம் டன் மக்காச் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காசோளம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சுமார் இரண்டாயிரம் கோடிக்கும் மேல் இழக்கின்ற னர். தமிழ்நாட்டில் விளைகிற மக்காச்சோளத் தில் 65 சதவிகிதத்தை கோழி மற்றும் மாட்டுத் தீவனங்கள் தயாரிப்பதற்காக நிறு வனங்கள் இடைத்தரகர்களை வைத்து விவ சாயிகளிடம் வாங்குகின்றனர். தமிழ்நாட்டின் தேவையை விட குறைவான உற்பத்தி இருக்கிற நிலையிலும் வியாபாரிகள் சிண்டி கேட் அமைத்துக் கொண்டு விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து வருகின்றனர். முத்தரப்புக் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு அறிவிக்கும் ஆதார விலை அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப் பதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும். மக்காச்சோளத்திற்கு அரசு அறிவித்த ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்கு மாநில அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தி உறுதிப் படுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.</p>
