தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழில்நுட்ப கதிர்

12 Dec 2025, 2:40 pm
தொழில்நுட்ப கதிர்

உலகின் மிகச் சிறிய ஏஐ சூப்பர் கம்ப்யூட்டர்

உலகின் மிகச் சிறிய ஏஐ சூப்பர் கம்ப்யூட்டரான Tiiny AI பாக்கெட் லேப்பை, Tiiny AI Inc என்ற அமெரிக்க நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு பவர் பாங்கை (Power Bank) போல் காட்சியளிக்கும் Tiiny AI பாக்கெட் லேப், 14.2 × 8 × 2.53 செ.மீ அளவும், 300 கிராம் எடையும் கொண்டது. இந்த கருவி, 120 பில்லியன் (120B) அளவின் LLM (Large Language Model)-ஐ முழுமையாக சாதனத்தில் செயல்படுத்தக் கூடியது. CPU - ARMv9.2 12-cores, RAM - 80 GB LPDDR5X, SSD - 1 TB ஆகிய அம்சங்களை கொண்டது. கிளவுட் சேவைகளின் மீது சார்ந்திராமல், தனிப்பட்ட தரவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. Tiiny AI பாக்கெட் லேப், “Smallest MiniPC (100B LLM Locally)” என்ற பிரிவின் கீழ் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த சிறிய ஏஐ சூப்பர் கம்ப்யூட்டர், நுகர்வோர் மின்னணுவியல் கண்காட்சி (CES) 2026-இல் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் அறிமுகம்!

இன்ஸ்டாகிராமில், பயனர்கள் தங்கள் விருப்பப்படி Reels feed-ஐ மாற்றிக்கொள்ளும் “Your Algorithm” என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், பயனர்களுக்கு Algorithm மீது கட்டுப்பாடு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்களுக்கு பிடித்த உள்ளடக்கங்களை முன்னிலைப்படுத்தவும், விருப்பமில்லாதவற்றை குறைக்கவும் முடியும். “Your Algorithm” அம்சத்தை பயன்படுத்தி, Reels-இல் வரும் வீடியோக்களை like, dislike, hide, அல்லது preference அடிப்படையில் மாற்றிக் கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது அமெரிக்காவில் சோதனை முறையில் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் உலகளவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுளின் புதிய ‘டிஸ்கோ’ ஏஐ ப்ரவுசர் அறிமுகம்

கூகுள் நிறுவனம், தனது புதிய “டிஸ்கோ” ஏஐ ப்ரவுசரை சோதனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ப்ரவுசர், ஜென்டாப்ஸ் (GenTabs) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த ப்ரவுசர், ஜெமினி 3 ஏஐ மாதிரியை பயன்படுத்தி, பயனர்கள் தற்போது பார்க்கும் உள்ளடக்கத்தின் அடிப்படையில், இணைய வழி செயலிகளாக (interactive web apps) உருவாக்கும் திறன் கொண்டது. GenTabs எனப்படும் வசதி, பயனர்கள் பார்ப்பதையும், அவர்களின் தேடல்களையும், கொடுக்கப்படும் உரை வழிமுறைகளையும் (text prompts) ஆய்வு செய்து, அதற்கேற்ற இணைய செயலிகளை தானாக உருவாக்குகிறது. உதாரணமாக, ஒருவர் பயண திட்டம் அமைக்கும்போது, GenTabs அந்தத் தேவைக்கேற்ற planner app-ஐ உருவாக்கும். பயனர்கள் தங்களின் சொந்த dynamic web apps-ஐ எளிய உரை வழிமுறைகளின் மூலம் உருவாக்கவும் முடியும். “டிஸ்கோ” ஏஐ ப்ரவுசர், தற்போது Google Labs வழியாக macOS-இல் சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது Chromium அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், Chrome போலவே இயங்கும், ஆனால் ஏஐ வசதிகள் நேரடியாக ப்ரவுசரில் இணைக்கப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.