சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டும்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டும்</strong></p>
<p>எல்ஐசி மகளிர் மாநாட்டில் எம். கிரிஜா பேச்சு சென்னை, நவ.25- சாதி, மத, இன வேறுபாடு களைக் கடந்து, நாமெல்லாம் சிந்தனையாலும் உழைப் பாலும் ஒன்றுபடக்கூடிய மக்கள் என்ற அடிப்படை யில் போராட முன்வர வேண்டும் என்று எல்ஐசி உழைக்கும் மகளிர் மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செய லாளர் எம். கிரிஜா அறை கூவல் விடுத்தார். எல்ஐசி உழைக்கும் மகளிர் தமிழ்நாடு மாநிலத் தின் 9ஆவது மாநாடு சென்னை வேப்பேரியில் சனிக்கிழமை (நவ.22) அன்று நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில், பாஜகவின் பீகார் தேர்தல் வெற்றியால் இன்சூரன்ஸ் துறையின் பங்குகளை, குறிப்பாக எல்ஐசி நிறுவ னத்தின் பங்கு விற்பனையை அதிகரிப்பதற்கும், அந்நிய நேரடி முதலீட்டின் அளவை 100 சதவீதமாக உயர்த்து வதற்கும் ஒன்றிய அரசு தயங்காதுஎனத் தெரிவித் தார். அரசியல் துணிவு கிடைக்கக் கிடைக்க, இந்தப் பிரிவுகளில் ஒன்றிய அரசு மேலும் முன்னேறிச் செல்லும். எனவே, பணியிடத் தில் நம் நலன்களைப் பாது காத்துக்கொள்ள, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் விடுக்கக் கூடிய அனைத்து அறைகூவ ல்களிலும் நாம் முழுமை யாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சமீப காலமாக ஊடகங் களில், பெண்ணின் மீதான தாக்குதல் நடைபெறும் போது, “நீ எதற்காக அங்கே சென்றாய்?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பணி முடித்து இரவு நேரத்தில் திரும்பும்போது பெண் களுக்கு ஏதாவது நேர்ந்தால், அப்போதும் இந்தச் சமூகம் இதே கேள்வியைத் தானே கேட்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார். பிற்போக்கு சக்திகள் நம்மை ஒரு சிறு அடை யாளத்திற்குள் அடைத்து வைத்து, அவர்களுடைய நிகழ்ச்சி நிரலை அரங்கேற் றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, சாதி, மத, இன வேறுபாடு களைக் கடந்து, நாமெல்லாம் கருத்தாலும் கரத்தாலும் உழைக்கக்கூடிய மக்கள் என்ற அடிப்படையில் ஒன்று பட்டுப் போராட முன்வர வேண்டும் என்று எம். கிரிஜா கேட்டுக்கொண்டார். முன்னதாக தென்மண் டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் ஆர். சர்வமங் களா வரவேற்றார். அறவாழி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். இம்மாநாட்டில் தென்மண்டல உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு இணை அமைப்பாளர் ஆர்.எஸ்.செண்பகம் வேலை அறிக்கையைச் சமர்ப்பித் தார். ஊடகவியலாளர் கவிதா முரளிதரன் வாழ்த்துரை வழங்கினார். தென்மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் வி. சுரேஷ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2இன் இணை அமைப்பாளர் எஸ். விஜயலட்சுமி நன்றி கூறினார். தீர்மானங்கள் இம்மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க வேண்டும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும், 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியும் பொதுப் போக்குவரத்தை அதிகப் படுத்தியும் பெண்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும், இரவு நேரப் பணிகளில் ஈடுபடும் பெண் களின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங் களின் பங்கு விற்பனையைத் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
