தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகள் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்!

11 Mar 2026, 4:32 pm
தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகள் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்!
<p><strong>தாகத்தில் தவிக்கும் வனவிலங்குகள் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்!</strong></p> <p>மேட்டுப்பாளையம், மார்ச் 11- மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் காட்டு யானை கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் தாகம் தீர்க்க வனத்துறை யால் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி கள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகம், யானைகளின் மிக முக்கியமான வலசைப் பாதையாக திகழ்கிறது. இங்கு &nbsp;யானைகள் மட்டுமின்றி புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை &nbsp;மற்றும் மான்கள் என ஏராளமான வன உயிரினங்கள் காணப் படுகின்றன. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் போதிய மழை இல்லாததாலும், கோடைக்கால தொடக் கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் வனப்பகுதி கடும் வறட்சியை சந்தித்துள்ளது. இதனால் வனத்தினுள் உள்ள இயற்கை நீரோடைகள், குட்டைகள் மற்றும் மழைநீர் தடுப்பணைகள் அனைத்தும் வேகமாக வறண்டு வருகின்றன. வனப்பகுதியில் நீர் ஆதாரம் குறையும் போது, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி விளைநிலங்க ளுக்கும், மக்கள் வசிக்கும் ஊர்களுக்குள்ளும் நுழைய வாய்ப்புள்ளது. இது மனித-விலங்கு மோதல்களுக்கு வழி வகுக்கும் என்பதால், இதனைத் தடுக்க வனத்துறை சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. யானைகள் பொதுவாக தூய்மையான நீரை மட்டுமே பருகும் இயல்புடையவை. இதைக் கருத்தில் கொண்டு, வன &nbsp;எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தண்ணீர் தொட்டிகளில் தேங்கியிருந்த பழைய பாசி படிந்த நீரை வெளி யேற்றி, அவற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் வன ஊழி யர்கள் ஈடுபட்டுள்ளனர். நகரப் பகுதிகளில் இருந்து &nbsp;தூய்மையான தண்ணீர், வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இத்தொட்டிகளில் நிரப்பப்பட்டு வரு கிறது. தற்போது கோடை வெப்பம் தணியும் வரை இந்த நீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. வனத்துறையினரின் சரியான நேரத்திலான இந்த முயற்சியால், வனவிலங்குகளின் தாகம் தணிப்பதோடு மட்டு மல்லாமல், அவை ஊருக்குள் நுழைவது தவிர்க்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது யானைகள் கூட்டமாக வந்து இந்த செயற்கை தொட்டிகளில் நீர் அருந்திச் செல்லும் காட்சிகள் வனப் பகுதியில் பரவலாகக் காணப்படுகின்றன.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.