குடிநீர் திட்டத்தை தனியார்மயமாக்கக் கூடாது
9 Mar 2026, 4:24 pm
<p><strong>குடிநீர் திட்டத்தை தனியார்மயமாக்கக் கூடாது</strong></p>
<p>சேலம், மார்ச். 9- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் திங்களன்று சேலம் கோட்டை மைதானத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியில் தடை யற்ற குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், பராமரிப்பு மற்றும் விநியோகப் பணி களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு தனி யார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர் வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 4,132 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. குடிநீர் விநியோகத்தை தனியா ருக்குத் தாரை வார்த்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அத்தியாவ சியத் தேவையாக இருக்கும் குடிநீர் விநியோகம் சீர்குலையும். கட்டண உயர்வு ஏற்படுவதுடன், முறையான விநியோகம் இருக்காது. எனவே, மாந கராட்சி நிர்வாகம் இந்த முயற்சியை உட னடியாகக் கைவிட்டு, குடிநீர் திட்டத்தை தொடர்ந்து மாநக ராட்சியே நேரடியாக நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக் கங்கள் தொடர்ந்து போராடி வருகி றது. இதன்ஒருபகுதியாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் முன்னெடுக் கப்பட்டது. சங்கத்தின் சேலம் கிழக்கு தலைவர் பிரபாகர் தலைமை ஏற்றார். இதில், மாவட்டத் தலைவர் குமார், பொருளாளர் கவின்ராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
