தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றத்தை நோக்கிய யுத்தம்!

27 Mar 2026, 3:15 pm
           மாற்றத்தை நோக்கிய யுத்தம்!
<p><strong>மாற்றத்தை நோக்கிய யுத்தம்!</strong></p> <p>திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வெற்றி பெறுபவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக் கும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்துள்ளது. &nbsp;எஸ்.ஜே.சாதிக்பாட்சா முதல் ப.குழந்தைவேலு, சி.சண்முக வேலு, பொள்ளாச்சி வ.ஜெயராமன் மற்றும் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வரை பல அமைச்சர்களை கண்டது இந்தத் தொகுதி. தொகுதி ஒரு பார்வை&nbsp;&nbsp; &nbsp; சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்து 524 வாக்காளர்களை கொண்ட இந்தத் தொகுதியில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,19,396. ஆண்களை விட அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. உடுமலை மற்றும் குடிமங்க லம் ஒன்றியங்கள், உடுமலை நகராட்சி மற்றும் பொள்ளாச்சி வட்டத்தை சேர்ந்த சில ஊராட்சிகள் எனப் பரந்து விரிந் துள்ள இந்தத் தொகுதி, விவசாயத்தையும் தொழிலையும் சரிசமமாகப் பெற்றுள்ளது. 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை கள், கயிறு தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள் மற்றும் பட்டு உற்பத்தி என வேலைவாய்ப்புகள் இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்க ளாக இருந்தும் தீர்க்கப்படாத கோரிக்கைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. &nbsp;தென்னை மற்றும் கயிறுத்தொழில்: நோய் மற்றும் விலை வீழ்ச்சி உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை விவ சாயம் மிக முக்கியமானது. ஆனால், கடந்த சில ஆண்டு களாக &rsquo;வாடல் நோய்&rsquo; மற்றும் &rsquo;வெள்ளை ஈ&rsquo; தாக்குதலால் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வாக வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மூலம் உரிய &nbsp;தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது விவ சாயிகளின் குமுறல். தக்காளி மற்றும் காய்கறி சாகுபடி உடுமலைப்பேட்டை வாரச்சந்தை தமிழகத்திலேயே தக்காளி வணிகத்திற்கு புகழ்பெற்றது. தக்காளி விளைச் சல் அதிகமாகும் காலங்களில் விலை ஒரு ரூபாய்க்கு கீழ் சரிந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் தக்காளியை சாலையிலேயே கொட்டும் அவலம் தொடர்கிறது. தக்கா ளியை சேமித்து வைக்க கிடங்கு என்கிற கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. &nbsp;நூற்பாலைகள், வேலைவாய்ப்பு சிக்கல் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. மூலப்பொருளான பருத்தி விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு ஆகிய வற்றால் பல மில்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. &nbsp;தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு கிடைப்ப தில்லை. இதனால் இளைஞர்கள் வேலை தேடி கோவை &nbsp;அல்லது திருப்பூர் நகரங்களுக்கு இடம்பெயர வேண்டி யுள்ளது. உள்கட்டமைப்பு உடுமலை நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரி சல் என்பது தீராத பிரச்சனையாக உள்ளது. மழைக்காலங் களில் முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலை களில் மழைநீர் தேங்கி சாக்கடை நீருடன் கலந்து ஓடுகிறது. நகருக்கு வெளியே ஒரு &rsquo;புறவழிச் சாலை&rsquo; &nbsp;அமைக்க வேண் டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கை. அரசு பொறியியல் கல்லூரி உடுமலை பகுதியில் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்க போதுமான அரசு கல்லூரிகள் இல்லை. தனியார் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் செலுத்த முடி யாத மாணவர்கள், அரசு பொறியியல் கல்லூரிக்காக கோவைக்கோ அல்லது வேறு மாவட்டத்திற்கோ செல்ல &nbsp;வேண்டியுள்ளது. உடுமலையில் ஒரு அரசு பொறியியல் கல் லூரி அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி பல தேர்தல் களாக வெறும் காகிதத்தோடு நின்றுவிட்டது. மக்களை கவர்ந்த திட்டங்கள் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள பெண் வாக் காளர்களை &rsquo;மகளிர் உரிமைத் தொகை&rsquo; திட்டம் நேரடி யாக சென்றடைந்துள்ளது. அதேபோல, &rsquo;விடியல் பயணம்&rsquo; இலவச பேருந்துத் திட்டம், கிராமப்புறப் பெண்கள் வேலைக்கும் சந்தைக்கும் செல்வதை எளிதாக்கியுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் &rsquo;தமிழ்ப் புதல்வன்&rsquo; மற்றும் &rsquo;புதுமைப்பெண்&rsquo; திட்டங்கள் இளைய தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள் ளன. இந்த மக்கள் நலத் திட்டங்களின் தாக்கம், வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஒரு மாபெ ரும் வெற்றியைத் தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் எதிர்பார்ப்பும் மாற்றமும் இதுவரையில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றிருந்தாலும், திமுக அரசின் தற்போதைய ஆக்கப்பூர்வமான திட்டங்களும், அதிமுகவின் கடந்த கால &nbsp;செயல்பாடுகள் மீதான அதிருப்தியும் வாக்காளர்களின் மனநிலையைத் திமுக பக்கம் திருப்பியுள்ளன. &nbsp;இந்த தேர்தல் &nbsp;போராட்டத்தில், திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் பிர காசமாக தெரிகின்றன.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.