பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் காத்திருப்பு போராட்டம் நிறைவு
14 Mar 2026, 2:57 pm
<p><strong>பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் காத்திருப்பு போராட்டம் நிறைவு</strong></p>
<p>திருவள்ளூர், மார்ச் 14- பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் - 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் திருவள்ளூர் டிஎச்ஒ அலு வலகத்தில் மாவட்ட தலைவர் என்.சுகன்யா தலைமையில் நடைபெற்றது. ஐநா விருது பெற காரணமாக இருந்த டபுள்எச்வி ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் என ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன்முறைபடுத்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், கடம்பத்தூர், சோழவரம், புழல் ஆகிய ஒன்றியங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். கே.ராஜேந்திரன், சங்கர்தாஸ் (சிஐடியு), மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.பத்மா(மாதர்சங்கம்), என்.கீதா(மாற்றுத்திறனாளிகள்சங்கம்) ஆகி யோர் வாழ்த்தி பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம் சிறப்புரை ஆற்றினார். 2 நாள் போராட்டத்தின் விளை வாக தமிழக அரசு வருகின்ற 16ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் போராட்டத்தை நிறைவு செய்தனர்.</p>
