தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் முயற்சி ‘விக்சித் பாரத் கிராமிக்’ மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும்!

15 Dec 2025, 2:48 pm
நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் முயற்சி ‘விக்சித் பாரத் கிராமிக்’ மசோதாவை  உடனடியாக கைவிட வேண்டும்!

நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் முயற்சி ‘விக்சித் பாரத் கிராமிக்’ மசோதாவை  உடனடியாக கைவிட வேண்டும்!

புதுதில்லி, டிச. 15 - தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை யுறுதிச் சட்டத்தை ஒழித்துக் கட்டி விட்டு, அதற்குப் பதிலாக ‘விக்சித் பாரத் கிராம்ஜி’ (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission Gramin  Bill - 2025) என்ற சட்டமுன்வடிவு அறிமுகப்படுத் தப்பட்டு இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட் டுள்ள அறிக்கையில் மேலும் கூறப் பட்டிருப்பதாவது: திட்டத்தின் அடிப்படையையே  குலைக்கும் மோடி அரசு ஒன்றிய அரசாங்கத்தால் இப்போது அறிமுகப்படுத்தப்படும் சட்டமுன்வடிவானது, மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் அடிப்படை குணத்தையே  முற்றிலுமாக மறுதலித்திருக்கிறது.  மேலும், புதிதாக அறிமுகப் படுத்தப்படும் சட்டத்தில் தேவைக் கேற்ப நிதி ஒதுக்க வேண்டிய பொறுப் பையும் ஒன்றிய அரசு சட்டப்பூர்வ மாக கைகழுவியுள்ளது.

உத்தரவாதமான வேலை நாட் களை 100-இலிருந்து 125 நாட்களாக அதிகரித்திருக்கிறோம் என்ற அர சாங்கத்தின் கூற்று, வெறும் வெளிப் பூச்சு மட்டுமே. உண்மையில், வேலை அட்டைகளை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில், இந்த சட்டமுன்வடிவு கிராமப்புறக் குடும்பங்களில் பெரும் பகுதியினரைத் திட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கு வழிவகுத்திருக் கிறது.  மீண்டும் நில முதலாளிகளின் காலடியில் தள்ளும் முயற்சி உச்சபட்ச வேலை நடைபெறும் விவசாயப் பருவங்களில் 60 நாட்கள்  வரை வேலைவாய்ப்பை நிறுத்தி வைக்க அரசாங்கங்களை அனுமதிக் கும் இந்த விதிமுறை, கிராமப்புறக் குடும்பங்களுக்கு வேலை மிகவும் தேவைப்படும் நேரத்தில் அதை  மறுத்து, அவர்களை நிலப்பிரபுக் களைச் சார்ந்திருக்கச் செய்யும் வகை யில் மாற்றப்பட்டிருக்கிறது.

பணி யிடத்தில் டிஜிட்டல் வருகையைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கு வது, வேலையிழப்பு மற்றும் உரிமை கள் மறுக்கப்படுவது போன்ற பெரும் சிரமங்களை கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துவ தாக உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதாவில் நிதி ஒதுக்கீட்டு முறை யில் ஏற்படவிருக்கும் மாற்றம் ஒரு முக்கிய கவலையாகும். இந்த சட்ட முன்வடிவு, ஊதியப் பணம் வழங்கு வதில் ஒன்றிய அரசின் பொறுப்பை 100  சதவிகிதத்திலிருந்து, பெரிய மாநிலங் களுக்கு 60:40 என்ற பங்கீட்டு முறைக் குக் குறைக்கிறது.

வேலையின்மைப் படிகள் மற்றும் தாமத இழப்பீட்டிற் கான செலவுகளை ஏற்கும் பொறுப்பை யும் மாநிலங்களின் மீது சுமத்துகிறது. இது மாநில அரசுகளுக்குத் தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் அதேநேரம், முடிவெடுக்கும் செயல் முறையில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் செய்கிறது.  ஒன்றிய அரசால் விதிக்கப்படும் மாநில வாரியான செலவின உச்சகையில், ‘நெறிமுறை ஒதுக்கீடு’ அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, இந்தத் திட்டத்தின் வரம்பை மேலும் குறைத்து, ஒன்றிய அரசின் பொறுப்புக் கூறலையும் நீர்த்துப் போகச் செய்கிறது. மகாத்மாவின் பெயரை மாற்றியது கபடத்தனம் மேலும் மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள இந்தத் திட்டத்தை ‘ஜி ராம் ஜி (G RAM G)’ என்று கபடத்தனமாக மாற்றியிருப்பதில் ஆர்எஸ்எஸ் - பாஜக-வின் சித்தாந்த சாய்மானம் பிரதிபலிக்கிறது.

எனவே, ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ சட்டமுன்வடிவு உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இதற்குப் பதிலாக ஒன்றிய அரசாங்கம் அரசியல்  கட்சிகள், தொழிற் சங்கங்கள் மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் அமைப்புகளுடன் கலந்துபேசி, மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற உறுதிச் சட்டத்தை வலுப்படுத்தி, அதனையே அனைவருக்கும் வேலை உத்தரவாத உரிமைகளை அளிக்கக்கூடிய விதத்தில் மாற்றி  வலுவாக அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.