வெனிசுலா ஜனாதிபதியைக் கடத்திய அமெரிக்கா! நள்ளிரவில் முக்கிய நகரங்கள் மீது குண்டுகளை வீசியும் சர்வதேச பயங்கரவாதம்!
3 Jan 2026, 2:20 pm
<p><strong>வெனிசுலா ஜனாதிபதியைக் கடத்திய அமெரிக்கா! நள்ளிரவில் முக்கிய நகரங்கள் மீது குண்டுகளை வீசியும் சர்வதேச பயங்கரவாதம்!</strong></p>
<p>காரகஸ், ஜன.3- 2026-ஆம் ஆண்டின் விடியல், உலக வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு இறை யாண்மை கொண்ட நாட்டின் மீது, சர்வ தேச விதிகளைத் துச்சமாக மதித்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இழி வான முகத்தைக் காட்டியுள்ளது. ஜனவரி 3 அதிகாலை, தென் அமெ ரிக்க நாடான வெனிசுலாவின் தலை நகர் காரகஸ் மீது அமெரிக்கப் படை கள் குண்டுகளை வீசித் தரைமட்டமாக்கி யதோடு, அந்நாட்டின் ஜனாதிபதி நிக் கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸைக் கடத்திச் சென்றுள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்திருப்பது உலகையே அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு தேசத்தின் மீதான தாக்கு தல் மட்டுமல்ல, உலக ஜனநாயகத்தின் மீதும், லத்தீன் அமெரிக்க மக்களின் சுயநிர்ணய உரிமையின் மீதும் நடத்தப்பட்டுள்ள நேரடிப் போராகும். இருளில் நிகழ்ந்த கோழைத்தனமான தாக்குதல் அமைதி உறங்கிக் கொண்டிருந்த அதிகாலை 2 மணியளவில், காரகஸ் நக ரின் வானில் அமெரிக்கப் போர் விமா னங்களும் ஹெலிகாப்டர்களும் அத்து மீறி நுழைந்தன. தலைநகரின் மையப் பகுதியான புயர்டே தியூனா ராணு வத் தளம், ஹிகுவெரோட் விமான நிலை யம் மற்றும் மிராண்டா, அரகுவா, லா குவைரா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெ ரிக்கா சரமாரியாகக் குண்டுகளை வீசி யது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீதும் ஏவுகணைகளை ஏவி, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவின் இந்த இரக்கமற்ற செயல், சர்வதேசப் பயங்கரவாதத்தின் உச்சக்கட்டமாகும். கட்டடங்கள் இடிந்து விழுந்து, காரகஸ் நகரமே புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் நிலை யில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாகக் கணக்கிடப்பட வில்லை என வெனிசுலா பாதுகாப்புத் துறை அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ லோபஸ் வேதனையுடன் தெரிவித்துள் ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த படையெடுப்பு, நாடு சந்தித்த மிகப்பெரிய அவமானத்தை பிரதி நிதித்துவப்படுத்துகிறது. வெனிசுலா மண்ணில் வெளிநாட்டுப் படைகளின் இருப்பை நாங்கள் இறுதிவரை எதிர்த்துப் போராடுவோம்,” என்று சூளு ரைத்துள்ளார். எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க ஒரு கிரிமினல் திட்டம் அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப் பிற்குப் பின்னால் இருப்பது ‘போதைப் பொருள் ஒழிப்பு’ என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் ‘எண்ணெய் தாகம்’ மட்டுமே. உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இருப்பைக் (303 பில்லி யன் பேரல்கள்) கொண்டுள்ள நாடு வெனிசுலா. அமெரிக்காவை விட 5 மடங்கு அதிக எண்ணெய் வளம் கொண்ட இந்த நாட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், அங்கிருக்கும் தங்கம் உள்ளிட்ட கனிம வளங்களைச் சுரண்டவும் அமெ ரிக்கா பல ஆண்டுகளாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. 2023-ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி வெனிசுலா முதலிடத்தில் இருக்க, சவூதி அரேபியா மற்றும் ஈரான் அடுத்தடுத்த இடங்களில் உள் ளன. ஆனால், வெறும் 55 பில்லியன் பேரல்கள் கையிருப்புடன் 9-வது இடத் தில் இருக்கும் அமெரிக்கா, தனது வல் லாதிக்கத்தைத் தக்கவைக்க வெனி சுலாவின் இயற்கை வளங்களை அபக ரிக்கத் துடிக்கிறது. இதற்காகவே கடந்த ஆண்டு முதல், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசாங்கத்தைத் தகர்க்க எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெயரில் உலா வரும் அமெரிக்க சிஐஏ கைக்கூலியான மரியா கோரினா மச்சோடாவிற்குப் பல கோடி ரூபாய் நிதி வழங்கி அமெரிக்கா சதி செய்து வந்தது. அதன் தொடர்ச்சி யாகவே, எவ்வித ஆதாரமுமின்றி மதுரோவை, போதைப்பொருள் கடத் தல் கும்பலுடன் தொடர்புபடுத்தி, பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டது டிரம்ப் நிர்வாகம். திட்டமிடப்பட்ட கடல்சார் பயங்கரவாதம் நேரடித் தாக்குதலுக்கு முன்பா கவே, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையை நிலைநிறுத்தி ஒரு போர்க்காலச் சூழலை உருவாக்கி யிருந்தது. ‘கடல்சார் பாதுகாப்பு’ என்ற பெயரில் வெனிசுலாவின் சுமார் 30 படகு கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் மீன வர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 110-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இது சர்வதேசக் கடற் படை விதிகளுக்கு எதிரானது மட்டு மன்றி, அப்பட்டமான கடல் கொள்ளை யாகும். குறிப்பாக, 2025 டிசம்பர் 10 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வெனிசுலா விலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ‘ஸ்கிப்பர்’ உள்ளிட்ட டேங்கர் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழி மறித்துக் கடத்தியது. இந்த பொருளா தாரத் தடைகளும், வளங்களைத் திரு டும் நடவடிக்கைகளுமே இன்று ஒரு முழுமையான போராக உருவெடுத் துள்ளது. ஜனாதிபதி கடத்தல்: ஜனநாயகத்தின் மீதான வன்முறை இந்நிலையில், ஜனவரி 3 சனிக் கிழமை அதிகாலை தாக்குதல் தொடங் கிய சில மணி நேரங்களிலேயே, அமெ ரிக்க ராணுவத்தின் சிறப்புப் படையான ‘டெல்டா’ பிரிவு, ஜனாதிபதி நிக்கோ லஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கடத்திவிட்ட தாக டிரம்ப் தனது சமூக வலை தளத்தில் வெட்கமின்றிப் பெருமை பேசி யுள்ளார். ஒரு நாட்டின் சட்டப்பூர்வ மான தலைவரை, மற்றொரு நாடு ராணு வத்தை அனுப்பிக் கடத்துவது என்பது 1990-களில் பனாமாவில் அமெரிக்கா நிகழ்த்திய அதே அராஜகத்தின் தொடர்ச்சியாகும். வெனிசுலா துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், “எங்கள் ஜனாதி பதி எங்கே இருக்கிறார் என்று தெரிய வில்லை, அவர் உயிருடன் இருப்ப தற்கான ஆதாரத்தை அமெரிக்கா உட னடியாக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். மதுரோ கடத்தப்படு வதற்கு முன்னதாகவே நாட்டில் தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, “அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் வீதிகளில் திரள வேண்டும்” என்று விடுத்த அழைப்பு, இப்போது வெனிசுலா முழுவதும் ஒரு புரட்சி நெருப்பாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் கொந்தளிப்பும் கண்டனக் குரல்களும் அமெரிக்காவின் இந்த அராஜகத்திற்கு எதி ராக உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. கியூபா, கொலம்பியா, ரஷ்யா, ஈரான், சிலி மற்றும் டிரினிடாட்-டொபா கோ உள்ளிட்ட நாடுகள் இது ஐ.நா. சபையின் விதிகளை மீறிய செயல் என்றும், பிராந்திய அமைதிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என்றும் சாடியுள்ளன. கியூப ஜனாதிபதி மிகுவல் தியாஸ்- கேனல் இத்தாக்குதலை “மன்னிக்க முடி யாத கிரிமினல் குற்றம்” என்று சாடியுள்ளார். இந்தியாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, இது அமெ ரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் சர்வதேசப் பயங்கரவாதம் என்று கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “வெனிசுலா ஜனாதிபதியையும் அவர் மனைவி யையும் கடத்தியிருப்பது சர்வதேசச் சட்டத்தின் அப்பட்டமான மீறல். டிரம்ப் தன்னை ஒரு ‘அமை திக்கான ஜனாதிபதி’ என்று கூறிக்கொள்வது எவ்வளவு பெரிய பொய் என்பதை இந்த நடவடிக்கை முழு உலகிற்கும் அம்பலப்படுத்தி யுள்ளது. வெனிசுலா மக்களுடன் நாங்கள் ஒற்று மையாக நிற்கிறோம்; வாய்ப்புள்ள இட மெல்லாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார். வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சியும் தனது கண்டன அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். லத்தீன் அமெரிக்காவைத் தனது பின்தோட்டம் என்று நினைக்கும் அமெ ரிக்காவின் கனவு ஒருபோதும் பலிக்காது. உல கெங்கிலும் உள்ள தொழிலாளர் அமைப்புகள் இந்த அநீதிக்கு எதிராகத் திரள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. மண்டியிடாது வெனிசுலா! அமெரிக்கா நினைப்பது போல, ஒரு தலை வரைக் கடத்துவதன் மூலம் ஒரு சித்தாந்தத்தை யோ அல்லது ஒரு நாட்டின் விடுதலையையோ முடக்கிவிட முடியாது. லத்தீன் அமெரிக்காவின் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த சைமன் பொலி வாரின் ரத்தம் ஓடும் அந்த மண்ணில், மக்கள் தங்கள் ஜனாதிபதியை மீட்கவும், தங்கள் இறையாண்மையைக் காக்கவும் ஆயுதமேந்திப் போராடத் தயாராகி வருகின்றனர். அமெரிக்கா வின் பொருளாதாரத் தடைகள், கடல் கொள் ளைகள் மற்றும் நேரடி ராணுவத் தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாண்டி, வெனிசுலா மக்கள் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிப் பார்கள் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச சமூகம் மவுனம் கலைத்து, அமெரிக்காவின் இந்தப் போர்க்குற்றத்தை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம் இது. வெனிசுலாவின் இறையாண்மையைப் பாது காப்போம்!</p>
<p> </p>
