தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவை விழுங்கும் அமெரிக்க ஒப்பந்தம் பொருளாதார அடிமைத்தனத்தின் புதிய முகம் - க.கனகராஜ்

9 Feb 2026, 3:02 pm
இந்தியாவை விழுங்கும் அமெரிக்க ஒப்பந்தம் பொருளாதார அடிமைத்தனத்தின் புதிய முகம் -  க.கனகராஜ்

இந்தியாவை விழுங்கும் அமெரிக்க ஒப்பந்தம் பொருளாதார அடிமைத்தனத்தின் புதிய முகம்

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய வர்த்தக  ஒப்பந்தம், இந்தியாவின் தற்சார்பு பொருளா தாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகும். 500 பில்லியன் டாலர் மதிப்பி லான அமெரிக்கப் பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் என்கிற இந்த வரைவு ஒப்பந்தத்தின் விபரங்கள் இந்தியாவையே விழுங்கிவிடும் அபாயம் கொண்டது. பட்ஜெட் நிதியைப் பதம் பார்க்கும் இறக்குமதி இலக்கு ஒரு நாடு எப்போது இறக்குமதி செய்யும்? உள்நாட்டில் ஒரு பொருளின் உற்பத்தி குறைவாக இருக்கும்போது அல்லது தட்டுப்பாடு ஏற்படும்போதுதான் வெளிநாட்டிலிருந்து வாங்கு வோம். ஆனால், அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தில் ‘இவ்வளவு தொகையை நீங்கள் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்’ என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஓராண்டு பட்ஜெட் மதிப்பு சுமார் 53 லட்சம் கோடி ரூபாய். ஆனால், அமெரிக்காவிடமிருந்து மட்டும் இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ள தொகை 45 லட்சம் கோடி ரூபாய் (500 பில்லியன் டாலர்).

நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகம், ராணுவம்,  கல்வி, மருத்துவம் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளம் என அனைத்திற்கும் சேர்த்து அரசு  முன் வைத்திருக்கும் தொகைக்கு இணையாக, ஒரு நாட்டின் பொருட்களை மட்டும் இறக்குமதி செய்வது என்பது எவ்வளவு பெரிய பொருளா தாரச் சிக்கல்? ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி யடைந்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தத் தொகை இன்னும் சில லட்சம் கோடிகள் உயரும். இது வர்த்தகமல்ல, நாட்டின் கஜானாவை அமெரிக்காவிற்குத் தாரை வார்த்துத் தரும் செயல். எரிசக்தி அரசியலும் தொழில்நுட்பச் சதியும் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் எண் ணெய் வாங்குவதை அமெரிக்கா தடுத்து நிறுத்து கிறது. ரஷ்யாவிற்குப் பதிலாக வெனிசுலா விலிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டு ள்ளது. வெனிசுலா ஜனா திபதியைக் கடத்தியுள்ள அமெரிக்கா, அங்குள்ள மொத்த எண்ணெய் வளத் தையும் கைப்பற்றி விட லாம் என்ற எண்ணத்தில் அந்த எண்ணெய்யை இந்தியாவிடம் விற்று லாபம் பார்க்கலாம் என கணக்குப் போடுகிறது. இதில் ஒளிந்திருக்கும் ஆபத்து என்னவென்றால், இந்தியாவின் பொதுத் துறை சுத்திகரிப்பு ஆலைகள் (CPCL போன்றவை) வளைகுடா மற்றும் ரஷ்ய எண்ணெய்யைச் சுத்தி கரிக்கவே வடிவமைக்கப்பட்டவை.

வெனிசுலா எண்ணெய் அடர்த்தி மிகுந்தது; வேறு வகை யானது. அதைச் சுத்திகரிக்க கூடுதல் செலவாகும் என்பதோடு, அதற்கான தொழில்நுட்ப மாற்றத் திற்குப் பெரும் முதலீடு தேவைப்படும். மலிவான ரஷ்ய எண்ணெய்யை விடுத்து, அமெரிக்கா வின் நலனுக்காகவும், அவர்களது மேலாதிக்கத் திற்காகவும் அதிகச் செலவாகும் வெனிசுலா எண்ணெய்யைத் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பைச் சீர்குலைக்கும். சிறுதொழில் அழிப்பும்  மானிய மோசடியும் அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக உறுதியளித்துள்ளது. இறக்குமதி வரியின் நோக்கமே உள்நாட்டுச் சிறுதொழில்களைக் காப்பதுதான். அமெரிக்கா தனது நாட்டு நிறுவனங்களுக்குப் பெருமளவு மானியம் வழங்கி, பொருட்களை மலிவாக உற்பத்தி செய்கிறது. அந்தப் பொருட்கள் குறைந்த வரியில் இந்தியாவிற்குள் வரும்போது, இந்தியச் சிறுதொழில் முனைவோரால் அவர்களு டன் போட்டி போட முடியாது. இது நாட்டின் முது கெலும்பாக இருக்கும் சிறு, குறு உற்பத்தித் துறை யை முற்றிலுமாக அழித்துவிடும். அமெரிக்கா தனது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்க லாம், ஆனால் இந்தியா தனது விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது அப்பட்டமான வஞ்சகம்.

விவசாயத்தின் மீதான இறுதித்தாக்குதல் வேளாண் சட்டங்கள் மூலம் எதைச் சாதிக்க நினைத்தார்களோ, அதை இந்த ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். அமெரிக்காவின் மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் பால் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும். இது இந்திய விவசாயிகளைத் தற்கொலைக்கும், நிலமிழப் பிற்கும் தள்ளும். குறிப்பாக, விதைக் கொள்கை யில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் நுழையும்போது, ஒரு விவசாயி தனது விளைச்சலில் இருந்து அடுத்த போகத்திற்கு விதை எடுக்க முடியாது. விதைக்காகவும், உரத்திற் காகவும் அந்நிய நிறுவனங்களிடம் கையேந்தும் நிலையை இந்த ஒப்பந்தம் உருவாக்குகிறது. விஸ்வ குருவா?  விசுவாசக் கூட்டாளியா? அமெரிக்காவின் இளைய பங்காளியாக இருப்பதில் மோடி அரசு ஒருவிதப் பெருமிதம் கொள்கிறது. கியூபா மற்றும் வெனிசுலா போன்ற சிறிய நாடுகள் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கின்றன. ஆனால், 140 கோடி மக்கள் கொண்ட இந்தியா, அமெரிக்காவின் சந்தையாக மாறுவது அவமானம். பாலஸ்தீனத்தில் பல்லா யிரக்கணக்கானோரைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவையும் டிரம்ப்பையும் “அமைதியை விரும்புபவர்” என்று மோடி பாராட்டுவது வர லாற்றுத் துரோகம். இந்த ஒப்பந்தம் என்பது இந்தியாவிற்கு லாபகர மான ஒன்று என்று சொல்வதற்கு எதுவுமே  இல்லை. இது விவசாயத்தையும், தொழில்துறை யையும் காவு கொடுத்து அமெரிக்காவின் பொரு ளாதாரத்தைச் செழிக்க வைக்கும் ஒரு சதித் திட்டம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.