அநியாய குப்பை வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
10 Jan 2026, 2:48 pm
<p><strong>அநியாய குப்பை வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்</strong></p>
<p>மதுரை, ஜன.10- மதுரை மாநகராட்சியில் விதிக் கப்பட்டுள்ள அநியாய குப்பை வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: மதுரை மாநகராட்சி நிர்வாகம் 100 சதவீதமாக வீட்டு வரியை உயர்த்தியதன் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்ற னர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப் பையும் மீறி, 2022ஆம் ஆண்டு வீடு கள் மற்றும் வணிக வளாகங்க ளுக்கு மாதந்தோறும் குப்பை வரி வசூலிக்கும் தீர்மானத்தை மாநக ராட்சி நிர்வாகம் நிறைவேற்றி, அதிகபட்சமாக ரூ.5,000 வரை வசூலித்து வருகிறது. தமிழ்நாட்டில் வேறெந்த மாநக ராட்சியிலும் இல்லாத வகையில் கூடுதலாக குப்பை வரி விதிக்கப் பட்டுள்ளது. மறுபுறம், வீடுவீடாக வும், தெருக்கள் மற்றும் வீதிகளி லும் குப்பை சேகரித்து வந்த மாந கராட்சி ஊழியர்களின் பணிகள் காண்ட்ராக்ட் முறைக்கு மாற்றப்பட் டுள்ளதால், தற்போது குப்பை சேகரிப்பு முறையாக நடைபெறாத நிலை உள்ளது. மலை போல் குவிந்துள்ள குப்பை இதன் விளைவாக, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் வீடுகளில் குப்பைகள் முறை யாக சேகரிக்கப்படாமல் தேங்கி யுள்ளன. அதேபோல், தெருக்கள் மற்றும் முக்கிய வீதிகளில் குப் பைகள் மலைபோல் குவிந்துள்ளன. துரித நடவடிக்கை தேவை மாநகரில் உள்ள கால்வாய் களில் கழிவுநீருடன் குப்பைகள் தேங்கி கடுமையான சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ள தால், மாநகர மக்கள் பல்வேறு தொற்றுநோய்களால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே, நகரில் தேங்கியுள்ள குப்பைகளை உட னடியாக அப்புறப்படுத்த மாநக ராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங்களுக்கு கூடுதலாக குப்பை வரி நிர்ணயிக் கப்பட்டுள்ளதாக, சிறு வியாபாரி கள் மற்றும் வணிகர்கள் தொட ர்ந்து எதிர்ப்பையும் ஆட்சேபணை களையும் தெரிவித்து வருகின்ற னர். சொத்து வரி அடிப்படையில் வரி நிர்ணயித்திடுக! சிறிய கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள குப்பை வரி தீர்மானத் தில் மாநகராட்சி நிர்வாகம் உரிய தலையீடு செய்ய வேண்டும். குறிப் பாக, வீடுகள் மற்றும் வணிக வளா கங்கள் செலுத்தும் சொத்து வரியை அடிப்படையாகக் கொண்டு, அதில் சதவீத அடிப்படையில் குப்பை வரியை நிர்ணயிக்க வேண்டும். இதேபோல், மதுரை மாநகரின் மையப் பகுதியாக உள்ள பெரி யார் பேருந்து நிலையத்தில், 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு பெரியார் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகக் கட்டி டங்கள் குளறுபடிகளுக்கு மத்தி யில் கட்டப்பட்டன. கட்டுமானப் பணிகள் தாமதப்பட்டு வந்த நிலையில் பல்வேறு போராட்டங்க ளுக்கு மத்தியில் பேருந்து நிலை யம் திறக்கப்பட்டது, பின்னர் வணிக வளாகக் கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன் னும் பயன்பாட்டிற்கு திறக்கப்படா மல் உள்ளது. இதுகுறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள், பல முறை மாமன்ற கூட்டங்களில் கேள்வி எழுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வணிக வளாகத்தை உடனே திறந்திடுக! இதனால் மாநகராட்சிக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், முன்பே கடைகள் வைத்திருந்த பயனாளிகள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளைப் பெற முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகக் கட்டிடத்தை உட னடியாக திறக்க மாநகராட்சி நிர்வா கத்திற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.</p>
