மக்களின் ஒற்றுமை கலை இரவு கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே!
16 Feb 2026, 2:37 pm

மக்களின் ஒற்றுமை கலை இரவு கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே!

கோவை, பிப்.16- மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், அடித் தட்டு மக்களின் கலை களைப் போற்றவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற் றும் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து கோவை மாவட்டம், அன்னூரில் 15 ஆம் ஆண்டு மக்களின் ஒற்றுமை கலை இரவு பிப். 14, 15 ஆகிய தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது. கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற முழக்கத்து டன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் விழாவில், தமிழகம் மற்றும் கேரளா வின் பாரம்பரிய கலை வடிவங்கள் அணி வகுத்தன. சனிக்கிழமை நடைபெற்ற விழா வில், புதுவை பூபாளம் கலைக் குழு வினரின் சமூக நையாண்டி தர்பார், மதுரையின் பாரம்பரிய மரக்கால் ஆட் டம் மற்றும் கோவையின் பல்சுவை நடன நிகழ்ச்சிகள் பொதுமக்களை வெகு வாக கவர்ந்தன. மேலும், சென்னை மற்றும் சேலம் கலைஞர்களின் சாகச மற்றும் பக்தி நடனங்கள் கலை இரவை மெருகேற்றின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், திரு வண்ணாமலையின் ‘பெரிய மேளம்’ முழக்கத்துடன் கலை இரவு துவங்கி யது. வீர விளையாட்டான கேரளாவின் ‘களரி பயட்டு’ மற்றும் திருவாரூர் கலை ஞர்களின் காவடி ஆட்டம் பார்வையா ளர்களை வியப்பில் ஆழ்த்தியது.