விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தலைவர்களை தாக்குதலுடன் கடத்திய ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்
11 Dec 2025, 3:52 pm
<p><strong>விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தலைவர்களை தாக்குதலுடன் கடத்திய ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்</strong></p>
<p>புதுதில்லி பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் பாஜக வின் ஜிண்டால் - தென் கொரியா வின் போஸ்கோ ஆகிய நிறுவனங்கள் இணை ந்து உருக்காலை அமைக்க உள்ளன. இந்த உருக்காலை அமையவுள்ள பகுதிகள் வளமான விவசாய நிலங்கள் ஆகும். இந்த விவசாய நிலங்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி ஒடிசா பாஜக அரசு ஜிண்டால் - போஸ்கோ நிறுவனங்களுக்கு தாரைவார்த்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை பறிப்பதை கண்டித்து “ஜிண்டால் போஸ்கோ புரோதிரோத் மன்ச் (Jindal Posco Protirodh Manch)” என்ற பெயரிலான எதிர்ப்பு இயக்கத்தின் கீழ், கியோஞ்சர் மாவட்டத்தி ற்குட்பட்ட கிராம விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், டிசம்பர் 9 அன்று கியோஞ்சர் மாவட்டத்தின் ஜமுனாபோசி கிராமத்தில் ஜிண்டால் போஸ்கோ புரோதிரோத் மன்ச் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கே எம் - சம்யுக்த கிசான் மோர்ச்சா) தேசிய தலைவ ரும், அகில இந்திய விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் (AIKKMS) தலைவருமான சத்யவான் மற்றும் பிற விவசாய தலைவர்கள் உரையாற்றி திரும்பிக் கொண்டி ருந்தனர். அப்போது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் சத்யவான் மற்றும் பிற விவசாயத் தலைவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தி யது. தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அவர்களை கடத்திச் சென்று கியோஞ்சர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளைப் போல ஒப்படைத்துள்ளது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல். கடும் கண்டனம் இத்தகைய சூழலில், சத்யவான் உள்ளிட்ட விவசாயிகள் தலைவர்கள் மீதான தாக்குத லுக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”சத்யவான் உள்ளிட்ட விவசாயிகள் தலைவர்கள் மீதான தாக்குதல் மற்றும் அவர்களை கடத்திச் சென்றதை வன்மை யாகக் கண்டிக்கிறோம். ஒடிசா பாஜக அரசாங்கம் இந்த விவகா ரத்தில் நடுநிலை வகிப்பதுபோல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் தேசபக்தி கொண்ட போராட்டக்காரர்களை அச்சுறுத்துவ தற்கான ஒரு தீய முறையையும் ஆதரித்தும் வரு கிறது. சத்யவான் மற்றும் பிற தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் லத்திகள் மற்றும் பிற ஆயுதங்களு டன் தாக்கியுள்ளனர். இதில் சத்யவானின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் தலைவர்க ளைக் கடத்திச் சென்று, கியோஞ்சர் மாவட்டத் தின் துருமங்கா காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தனர். அங்கு காவல்துறையினர் தலைவர்க ளை பல மணி நேரம் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தனர். காவல் நிலையத்திற்கு வெளி யேயும் உள்ளேயும் தலைவர்களின் கைபேசி களைப் பறிக்க குண்டர்கள் பலமுறை முயன்ற னர். குறிப்பாக காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்ட தலைவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட வில்லை. இந்த அனைத்து தவறான நடத்தை யும் காவல்துறையின் முன்னிலையிலேயே நடந்தது. பல மணிநேரம் கழித்தே காவல்துறை யினர் சத்யவான் உள்ளிட்ட தலைவர்களை விடு வித்துள்ளனர். தொடர் சிறையில் விவசாயிகள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்திய சந்திப்பு இயக்கத்தின் போது, நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள், பொதுமக்கள் உறுதியாகத் தெரிவித்தனர். இறுதிவரை போராடுவோம் என்று உறுதியாக இருந்தனர். ஆனால் போராடும் கிராம மக்க ளின் மன உறுதியைக் குலைக்க, காவல்துறை யும், சமூக விரோதிகளும் பலமுறை கிராம மக்களை ஒன்றிணைந்து தாக்கியுள்ளனர். குறிப் பாக நவம்பர் 26 அன்று நள்ளிரவில் ஒரு பெரிய காவல்துறை படை கிராமங்களைச் சுற்றி வளைத்து, ஜிண்டால் - போஸ்கோ புரோதி ரோத் மஞ்ச் இயக்கத்தின் செயலாளர் தோழர் பெனூதர் சர்தார் மற்றும் பிற 5 தலைவர்களை கைது செய்து, அவர்கள் மீது போலியான வழக்குகளைப் பதிவு செய்தது. அவர்கள் இன்றுவரை சிறையில் உள்ளனர். அச்சத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக கிராம மக்களை வேரறுப்பதில் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசுகள் வெற்றி பெற முடியவில்லை. அந்நிய நாட்டைச் சேர்ந்த சுரண்டுபவர்கள் மற்றும் அவர்களின் உள்நாட்டு நண்பர்க ளுக்காக நாட்டின் மற்றும் மக்களின் சொத்துக் களை விற்கும் இழிவான திட்டம் அம்பலப் படுத்தப்படுமோ? என்று அஞ்சி ஆர்எஸ்எஸ் - பாஜக, இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள் ளது.சத்யவான் உள்ளிட்ட தலைவர்கள் மீதான தாக்குதல் மூலம் விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பதற்கான வழியை ஏற்படுத்த வே செய்யப்படுகின்றன என்ற உறுதியான கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம். குறிப்பாக தலைவர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக இயக்கத்தின் மீது மட்டுமல்ல, சாதாரண ஏழை மக்களின் வாழ்வின் மீதும் தொடுக்கப்பட்ட கொடூரமான தாக்குதல் ஆகும். அதனால் ஜன நாயக சக்திகளையும், உழைக்கும் மக்களை யும், ஒட்டுமொத்தமாக பாசிச - பாஜக அர சாங்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலை மிகுந்த வீரத்துடன் முறியடிக்க முன்வருமாறு ஐக்கிய விவசாயிகள் முன்ன ணிக்கு அழைப்பு விடுக்கிறது. கார்ப்பரேட் கொள்ளையிலிருந்து தாய்நாட்டைக் காக்க ஆர்எஸ்எஸ் - பாஜகவால் செயல்படுத்தப்படும் ஜிண்டால் போஸ்கோ புரோதிரோத் மஞ்சின் வீரமிக்க போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி புகழாரம் சூட்டுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு கடிதம் சத்யவான் மற்றும் விவசாய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி கடத்திச் சென்ற ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் அனைவரை யும் உடனடியாக கண்டறிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும், குடிமக்களின் ஜனநாயக போராட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரி ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி-க்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடிதம் எழுதியுள்ளதாகவும் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.</p>
