தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிர உணவு தட்டுப்பாடு அபாயம் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வாரமே தாக்குப்பிடிக்குமாம்!

8 Mar 2026, 3:42 pm
மத்தியக் கிழக்கு நாடுகளில்  தீவிர உணவு தட்டுப்பாடு அபாயம் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வாரமே தாக்குப்பிடிக்குமாம்!
<p><strong>மத்தியக் கிழக்கு நாடுகளில்&nbsp; தீவிர உணவு தட்டுப்பாடு அபாயம்&nbsp;ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வாரமே தாக்குப்பிடிக்குமாம்!</strong></p> <p>துபாய் அமெரிக்கா, இஸ்ரேலின் கூட் டுத் தாக்குதலில் ஈரான் நாட் &nbsp;டின் உயர் தலைவர் காமேனி &nbsp;மற்றும் அப்பாவி குழந்தைகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட் &nbsp;சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெய ர்ந்து உள்ளனர். ஈரான் சுகாதாரத் துறை கணக்கீட்டின் படி, அமெ ரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி யாகி உள்ளனர் என செய்திகள் வெளி யாகியுள்ளன. இந்நிலையில், உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டதால் கடும் &nbsp;கோபத்தில் உள்ள ஈரான் ஹார்முஸ் &nbsp;ஜலசந்தியை மூடி உலக நாடுகளுக்கு &nbsp;பெரும் பொருளாதார சரிவை ஏற் &nbsp;படுத்தியுள்ளது. குறிப்பாக அண்டை &nbsp;நாடுகளில் இருக்கக்கூடிய கட்ட டங்கள் மீதும், அமெரிக்க தூதரகங்கள் &nbsp;மீதும் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்திய வண்ணம் இருக்கிறது. இந்த &nbsp;தாக்குதலால் ஐக்கிய அரபு நாட்டின் துபாய் நகரம் தான் அதிகமாக பாதிக் &nbsp;கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் உணவு &nbsp;தட்டுப்பாடு ஏற்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரே பியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் தங்களுடைய உணவு தேவைகளை பெரும்பாலும் இறக்குமதி மூலமாக தான் நிறைவேற்றிக் கொள்கின்றன. அதாவது இந்த நாடுகளுக்கு தேவை யான காய்கறிகள், பழங்கள் மற்றும் &nbsp;பிற உணவுப்பொருட்கள் வெளிநாடு களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட வேண்டும். 70% உணவு &nbsp;ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் &nbsp;கள் மூலம் தான் கொண்டுவரப்படு கிறது. தற்போது ஹார்முஸ் ஜல சந்தி மூடப்பட்டுவிட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியே உணவு கொண்டு வருவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கி றது. ஒரு வார காலமாக எந்த கப்பலும் &nbsp;இந்த ஜலசந்தியை கடக்கவில்லை. அதே வேளையில் தொடர்ச்சியாக நடத்தக்கூடிய டிரோன் தாக்குதல், ஏவுகணை வீச்சு உள்ளிட்டவை கார ணமாக வளைகுடா நாடுகள் முழு வதுமே விமான போக்குவரத்து நிறுத்தி &nbsp;வைக்கப்பட்டிருக்கிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் மிகக் குறைந்த &nbsp;எண்ணிக்கையில் பயணிகள் விமா னம் மட்டுமே இயக்கப்படுகிறது. இத னால் விமானங்கள் வழியாக உண வுப் பொருட்களைக் கொண்டு வரு வதும் தடைப்பட்டு இருக்கிறது. பிப்., 28 முதல் மார்ச் 3 வரையி லான காலகட்டத்தில் மத்திய கிழக்கு &nbsp;நாடுகளில் விமானம் மூலம் சரக்கு &nbsp;போக்குவரத்து என்பது 22% குறைந்தி ருக்கிறது. தற்போது கடல் மார்க்கமாக வும் உணவு கொண்டு வர முடிய வில்லை விமான மூலமாகவும் கொண்டுவர முடியாத நிலை என்ப தால் துபாய் உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் காய்கறி, பழங்கள், பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி இருப்பதாக தகவல் வெளி யாகியிருக்கிறது. இதுதொடர்பாக ஸ்டீபன் பால் என்ற லாஜிஸ்டிக் பிரிவு நிபுணர் எஸ்ஆர்எப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,&rdquo;துபாயில் மார்ச் &nbsp;5ஆம் தேதி நிலவரப்படி 10 நாட்களுக் கான உணவுப் பொருட்கள் மட்டுமே &nbsp;இருக்கிறது. இன்னும் அங்கே 7 நாட்க ளுக்கு மட்டுமே உணவு பொருட்கள் கிடைக்கும். அதற்கு நிலைமை சீராக வில்லை என்றால் காய்கறி, பழங்கள், பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது துபாய்க்கு மட்டுமின்றி சில வளைகுடா நாடுகள் மற்றும் முழு ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பொருந்தும்&rdquo; என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். துபாயில் மெரினா டவர் தகர்ப்பு பல்வேறு அமெரிக்க ராணுவ தளங் &nbsp;களை கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீ ரகத்தின் துபாய் நகரத்தில் ஈரான் &nbsp;ஏவிய டிரோன்கள் இடைமறிக்கப்பட் டன. அப்போது நடுவானில் அழிக்கப் பட்ட டிரோன்களின் பாகங்கள், துபா யின் 90 மாடிகள் கொண்ட பிரமாண்ட மான மெரினா டவர் கட்டிடம் மீது &nbsp;விழுந்தது. இதில் அந்த கட்டிடத்தின் உச்சி பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர் என செய்தி கள் வெளியாகியுள்ளன. கத்தார், சவூதி அரேபியாவிலும் ஈரான் தாக்கு தலை தீவிரப்படுத்தியுள்ளதாக அந் &nbsp;நாட்டின் அரசுகள் மூலம் செய்திகள் &nbsp;வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ், ஜெருசலேம், ஹைபா உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடுத் &nbsp;தது. இதனால் இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.