கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் ஒன்றிய அரசு!
2 Feb 2026, 4:51 pm
<p><strong>கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் ஒன்றிய அரசு!</strong></p>
<p>கோவை, பிப்.2- மக்களிடம் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு, கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு பல்லாயிரம் கோடி மானியம் வழங்கி, அதன் முதலாளி களுக்கு ஒன்றிய அரசு சேவை செய்து வருகிறதென, கே.கனக ராஜ் சாடியுள்ளார். கோவை, பீளமேடு பகுதியில் ஞாயிறன்று, கட்சி நிதி மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எளிய மக்களிடம், அவர்கள் விரும்பி தரு கின்ற பணத்தை பெற்றுத்தான் இயக்க பணிகளை செய்து வரு கிறது. ஒருபோதும் பெரு முதலாளி களிடம், கார்ப்பரேட் நிறுவனங்க ளிடம் நிதி வாங்குவதில்லை. ஆனால், நாட்டை ஆளும் பாஜக, பெரும் முதலாளிகளிடம் பணம் பெற்று, அவர்களுக்காகத்தான் ஆட்சி நடத்தி வருகிறது. தமிழ் நாட்டின் பிரபலமான தொழில் நிறு வனமான முருகப்பா குழுமம், மைக்ரோ சிப் நிறுவனம் தொடங்கு வதற்கு இந்திய அரசிடம் அனுமதி கேட்டது. ஒன்றிய அரசும் 70 சத வீதம் மானியத்துடன் அனுமதி வழங்கியது. பின்னர் அந்த நிறுவ னம் அனுமதி பெறுவதற்கு பாஜக விற்கு, ரூ.125 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறது என்பது பின் னர் தெரியவந்தது. முருகப்பா குழு மத்திற்கு 70% மானியம் வழங்கியது என்பது நம்முடைய வரிப்பணத்தில் இருந்துதான். ஒன்றிய அரசாங்கத் துக்கு வருகிற பணம் நீங்களும், நானும் அன்றாடம் சோப்பு, சீப்பு, அரிசி, கோதுமை என நாம் வாங்கும் எல்லாத்துக்கும் நாம் வரி கொடுக் கிறோம். இந்த வரிப்பணத்தை நம்மி டம் வாங்கி, மானியம் என்கிற பெயரில் ஒரு பெரு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டு, அதிலிருந்து பல கோடி ரூபாயை அடித்து பறித்த கட்சி பாஜக. சுதந்திர இந்திய வரலாற்றில் அரிசிக்கும், கோதுமைக்கும் எந்த அரசாங்கமும் வரி போட்டதில்லை. இவற்றிற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் வரி போட்டதும் கிடை யாது. ஆனால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வரி போட் டுள்ளார். 5% வரி அரிசிக்கும், கோது மைக்கு 5% வரி, தங்கத்துக்கு 3% வரி. மேலும், ஏழைகள் வாங்க முடி யாத வைரத்திற்கு 1/2% வரி, எல் லோரும் சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு 5% வரி. இந்த உலகிலேயே ஊழல் மட்டுமே செய்கிற கட்சியாக, பெரும் முதலாளிகளுக்கு சேவ கம் செய்வதற்கு அவதாரம் எடுத்து வந்த கட்சி என்றால் நரேந்திர மோடி யும், பாஜகாவும், ஆர்எஸ்எஸ்-சும் தான். ஒரு லட்சம் ரூபாய் வருமா னம் கூடுதலாக வந்தால், 30 ஆயிரம் ரூபாய் வரி கட்டணும். ஒரு பெரு முதலாளிக்கு 100 கோடி ரூபாய் லாபம் வந்தால், அவர் 22% கட்டி னால் போதும். நாம் 30 ஆயிரம் கட்டணும்; ஆனா பெரு முதலாளி 22% கட்டினால் போதும். அத னால்தான் இந்த 10 ஆண்டுகளில் வேறு எப்போதும் இல்லாத அள விற்கு பாஜக-வினுடைய கணக் கில், அதாவது கணக்கில் அவர்கள் காட்டிய தொகை மட்டும் ரூ.10 ஆயி ரம் கோடிக்கும் அதிகமாக வைத் துள்ளது. பிஎம்கேர் மூலம் பல நிறுவனங் களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டி, அதனை என்ன செய் தார்கள்? எவ்வளவு நிதி கிடைத் தது? என்ற விவரங்களை கூறாமல், ‘அது தனி நிதி அதுக்கு கணக்கு; சொல்ல மாட்டேன்’ என்கிறார் பிரத மர். இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதித்த ஒரு பெயரை பயன்ப டுத்தி, பலரிடம் அடிச்சு பிடுங்கி வாங்கி வைத்துக்கொண்டு கணக்கு காட்ட மாட்டேன் என்கி றார். தில்லியில் ரூ.150 கோடியில், 5 லட்சம் சதுர அடியில் 36 மாடி கொண்ட கட்டிடத்தை கட்டியுள் ளது ஆர்எஸ்எஸ். நாம் ஒரு ரூபாய்க்கு தீப்பட்டி வாங்கினாலும் வரி கட்டணும். ஆர்எஸ்எஸ் ரூ.150 கோடி வாங்கிட்டு, ஒரு நயா பைசா கூட வரி கட்டவில்லை? இதைப் பற்றி கேட்டால், உலகத்திலேயே பதிவு செய்யப்படாத ஒரு என்ஜிஓ என்கிறார்கள். மேலும், ஆர்எஸ் எஸ் ஒழுக்கத்தை மட்டும்தான் சொல்லிக் கொடுக்கிறதாம்: ஒழுக் கத்துடன், வரி கட்டுறதையும் சேர்த்து சொல்லிக் கொடுங்கள் இன்று நாம் சொல்கிறோம். இந்த கட்டிடத்தில் வாகனங்கள் நிறுத்தத்திற்காக 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை இடித் துள்ளனர். வேறு யாராவது கட்டி ருந்தால், இந்துக்களுக்கு எதிரானர் கள் என்று கூறியிப்பார்கள். ஆனால், ஒரு கோவிலை, இந்தியா வின் தலைநகரில் இவர்கள் ஆட்சி இடித்து தரைமட்டமாக்கியுள்ள னர். இந்நிலையில், மக்களை ஏமாற்றி அவர்களுக்குள் பிரிவி னையை உருவாக்கி பெரும் ஊழல் செய்தும், கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு சேவை செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ள பாஜக ஆட்சியை வீழ்த்த, இடதுசாரிகள் வலுவாக போராடுவதற்கு இது போன்ற எளிய மக்களின் நிதி பயன் படும். இவ்வாறு அவர் பேசினார்.</p>
