“தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு; அரசியலமைப்பைச் சிதைக்கும் ஆளுநர்”
22 Jan 2026, 2:57 pm

“தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு; அரசியலமைப்பைச் சிதைக்கும் ஆளுநர்”

சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி கடும் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்தின் மீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி ஜனவரி 22 வியாழக்கிழமை உரையாற்றி னார். அவரது உரையில், ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்குகள், ஆளுநரின் வரம்பு மீறிய செயல்பாடுகள் மற்றும் உழைக்கும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை முன்வைத்தார். அதன் அம்சங்கள் வருமாறு: ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோத நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வரிவரு வாயில் உரிய பங்கை வழங்க மறுப்பதோடு, கல்விக்கான நிதியை வழங்காமல் திட்டமிட்டு இழுத்தடிக்கிறது.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்திருப்பதும், பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை நிரா கரித்திருப்பதும் தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைந்துள்ளன. விவசாயிகளின் நலன் சார்ந்து, நெல்லின் ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க மறுப்பது டெல்டா உள்ளிட்ட தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் வஞ்சகமாகும்.

மேலும், கீழடி தொல்லியல் ஆய்வுக்கு உரிய அங்கீகாரம் வழங்க மறுப்பதன் மூலம் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையையும், கலாச்சார முக்கியத்துவத்தையும் மதிக்காத போக்கை ஒன்றிய அரசு வெளிப்படுத்துகிறது. இத்தகைய தமிழக விரோதப் போக்கிற்கும், எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் கட்டாயம் தக்க பாடம் புகட்டுவார்கள். தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு மீதான தாக்குதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தொழிலாளர்கள் நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற சலுகைகளையும் உரிமை களையும் பறிக்கும் விதத்தில் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன.

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்குடன் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, மகாத்மா காந்தி யின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர், பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் மீது தாக்குதல்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது வன்முறை எனச் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமை யைப் பறிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அனைத்து அதிகாரங்களையும் ஒன்றியத்தில் குவித்து வைத்துக்கொண்டு மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் விரோதமாகச் செயல்படுவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எதிர்க்கட்சி மாநில அரசுகளுடன் மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர்களை ஏவி விடுவது சர்வாதிகார பாணியிலான நவீன பாசிச நடவடிக்கையாகும். இதற்கு எதிராக நாடு முழுவதும் உழைப்பாளி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தை மிதிக்கும் ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 17-ன் படி, மாநில அரசு தயாரித்துள்ள உரையைப் படிப்பதே ஆளுநரின் கடமையாகும். ஆனால், ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ஓர் எதிர்க்கட்சித் தலைவர் போலச் செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவை பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கும் மரபுகளை மாற்ற வேண்டு மென்று அடாவடித்தனம் செய்வதோடு, “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்று அடம் பிடிக்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பாஜக அல்லாத மாநிலங்களிலும் ஆளுநர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் இந்த ‘காலாவதியான’ ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தமிழக சட்டப்பேரவையின் 100 ஆண்டு கால மரபுகளையும் அதன் மாண்புகளையும் காக்கும் வகையிலும், ஆளுநரின் திட்டமிட்ட முயற்சி களை முறியடித்து இந்த அவையில் முத லமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகிறேன். ஆளுநர் உரையுடன் கூட்டம் துவங்கும் என்ற நடைமுறையை நீக்கும் வகை யில் சட்டத்தைத் திருத்தும் முதலமைச்சரின் முயற்சியும் வரவேற்கத்தக்கது. அதேபோல், தமிழகத்தின் மதநல்லிணக்கத் தைச் சீர்குலைக்க மதவெறிக் கும்பல்கள் திட்ட மிட்டு அவதூறுகளையும், பொய்ப் புரட்டுகளை யும் பரப்புகின்றனர். திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி மற்றுமொரு அயோத்தியை உரு வாக்குவோம் என்று கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சனையில் முதலமைச்சரின் மின்னல் வேகத் தலையீட்டையும், சட்டப் போராட்டத்தை யும் கட்சியின் சார்பில் பாராட்டுகிறேன். அரசு ஊழியர்கள் வெற்றி மற்றும் பணி நிரந்தரக் கோரிக்கைகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய பென்சன் திட்டத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ (GPS) கொண்டு வந்துள்ள முதலமைச்சரைப் பாராட்டுகிறேன். அதேசமயம், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா உள்ளிட்ட திட்ட ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதி யம் வழங்கிட வேண்டும்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், சாலைப் பணியாளர் கள், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள், மின்வாரியத்தில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோ ரின் பணி நிரந்தரக் கோரிக்கையை அரசு பரி சீலித்து நிறைவேற்றிட வேண்டும். மின்சாரத் துறையில் ‘கேங்மேன்’ தொழிலாளர்களைக் கள உதவியாளர்களாகப் பணி மாற்றம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழி லாளர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வு காலப் பலன்கள் மற்றும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் கேட்டுப் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வாழ்வாதாரக் கோரிக்கைகள் மற்றும் நில உரிமை w மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயர்த்தவேண்டும். w கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,500 வழங்கவேண்டும். w சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்க உயர்மட்டக் குழு அமைப்பதாக முதலமைச்சர் அளித்த உறுதிமொழிக்கு நன்றி; இதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

w சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்தத் தொடரிலேயே தனிச்சட்டம் இயற்ற வேண்டும். w கனிம வளங்கள் மற்றும் மணல் குவாரி களைச் சூறையாடுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக உரிமை மற்றும் சாம்சங் தொழிலாளர் பிரச்சனை சென்னை மாநகர காவல்துறையின் நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்குப் புறம்பாக உள்ளன. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மது ரோவுக்கு ஆதரவான போராட்டத்தின் போது, தோழர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சித் தலை வர்களைக் கண்ணியமற்ற முறையில் சட்டை யைப் பிடித்து இழுத்து வேனில் ஏற்றியது கண்டி க்கத்தக்கது. காவல்துறையின் இத்தகைய போக்கை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

எனது கீழ்வேளூர் தொகுதியில் வாடகைக் கட்டிடத்தில் சிதலமடைந்து இயங்கும் வேளாண்மை கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், சாம்சங் நிறுவனத்தில் பழிவாங்கும் நோக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட 27 தொழி லாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாகை மாலி வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த தொழி லாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், “சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, 27 நபர்களுக்கும் மீண்டும் பணி வழங்க உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப் படும்” என உறுதி அளித்தார். ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளுக்காக முதலமைச்சரைப் பாராட்டுவதோடு, நீண்டகால மக்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டுமெனக் குறிப்பிட்டு நாகை மாலி தனது உரையை நிறைவு செய்தார்.