பேரிடர் பாதிப்புக்கு 17 சதவிகிதம் மட்டுமே நிதி வழங்கி ஒன்றிய அரசு பாரபட்சம்! முதல்வர் குற்றச்சாட்டு
17 Dec 2025, 4:11 pm
<p><strong>பேரிடர் பாதிப்புக்கு 17 சதவிகிதம் மட்டுமே நிதி வழங்கி ஒன்றிய அரசு பாரபட்சம்! முதல்வர் குற்றச்சாட்டு</strong></p>
<p>சென்னை, டிச. 17 - கடந்த நான்கு ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சத விகிதத்தை மட்டுமே ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் மூன்றாவது கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலை மையில் புதன்கிழமை (டிச. 17) அன்று நடைபெற்றது. இதில், காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குவது தொடர்பாக ஆலோ சனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகை யில், காலநிலை தொடர்பாக மாவட்ட அளவில் நடத்தப் படும் ஒருநாள் முகாம் இனி இரண்டு நாட்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். பசுமை பள்ளி வகுப்பறை களில் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறினார். நமது அரசுக்கு வளர்ச்சி, ஒரு கண் என்றால் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண் என்றும் அவர் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாக பார்த்திருக்கிறோம், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக் கையால் ‘டிட்வா புயல்’ பாதிப்பில் இருந்து தமிழ கத்தை பாதுகாத்துள்ளோம் என்றும் முதல்வர் தெரிவித் தார். மிக விரைவில் காலநிலை கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக கூறினார். சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதி கரித்து வருவதால் மக்கள் அதிகளவில் பொதுப் போக்கு வரத்தை பயன்படுத்துவதுதான் நெரிசலைக் குறைக்க சிறந்த வழி என்றும், அதை ஊக்குவிக்க 120 மின்சாரப் பேருந்துகளை கொண்டு வந்துள்ளோம் என்று கூறிய முதலமைச்சர், இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவிகிதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்து உள்ளது என்று முதல்வர் குற்றம் சாட்டினார். ரூபாய் 24,670 கோடி நிதி கேட்டதில் ரூபாய் 4,130 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது, அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.</p>
