தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிப்பதே ஒன்றிய அரசின் நோக்கம்

25 Dec 2025, 5:24 pm
100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிப்பதே ஒன்றிய அரசின் நோக்கம்
<p><strong>100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிப்பதே ஒன்றிய அரசின் நோக்கம்</strong></p> <p>தஞ்சையில் &nbsp;உ. வாசுகி கடும் சாடல் தஞ்சாவூர், டிச. 25- &nbsp;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தை ரத்து செய்யும் ஒன்றிய பாஜக அரசின் புதிய சட்டத் தைக் கண்டித்து, புதனன்று தஞ்சை மாவட்டம் முழு வதும் 35 இடங்களில் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;திருவையாறு ஒன்றியம் கண்டியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலை மை வகித்து உரையாற்றிய சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி, ஒன்றிய அரசின் புதிய சட்டங் களை கடுமையாகச் சாடி னார். &nbsp;அவர் பேசியதாவது: &nbsp;நிதிச்சுமையும் மாநில உரிமைகளும் 100 நாள் வேலைத் திட்டத் திற்கான நிதிப் பங்கீட்டை 90:10 என்ற விகிதத்திலிருந்து 60:40 என மாற்றி மாநில அர சுகள் மீது ஒன்றிய அரசு கடும் நிதிச்சுமையை ஏற்றியுள் ளது. &nbsp;ஜிஎஸ்டி மூலம் மாநி லங்களின் வரி அதிகாரத்தை பறித்துக்கொண்ட மோடி அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பங் கீட்டையும் முறையாகத் தரா மல் வஞ்சிக்கிறது. புதிய சட்டத் தின் மூலம் வேலை உறுதி &nbsp;என்பதைச் சிதைத்து, இனி ஒன்றிய அரசு ஒதுக்கும் &lsquo;துண்டுத் துக்காணி&rsquo; நிதியை வைத்து மட்டுமே வேலை வழங்க முடியும் என்ற நிலையை உருவாக்கி யுள்ளனர். தொழிலாளர் விரோதப் போக்கு வேலை நேரத்தை அதி கரித்தல், ஊதிய நிர்ணய அதிகாரத்தைத் தன்வசம் வைத்திருத்தல் என மாநி லங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துள்ளது. தில்லியில் இருப்பவர்கள் எந்த ஊராட்சிக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஜனநாயக விரோதமானது. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங் களில் வழங்கப்படும் கூடு தல் கூலியைத் தடுத்து, கூலி யைக் குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வாழைப் பழத்தைத் தருவதாகக் கூறி விட்டு, தோலை மட்டும் மக்க ளிடம் கொடுத்து பழத்தைத் தான் வைத்துக் கொள்ளும் ஏமாற்று வேலையாகும். &nbsp;கார்ப்பரேட் நலன் &nbsp;2047இல் வளர்ச்சி அடைந்த பாரதம் எனப் பேசும் பாஜக உண்மையில் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக் காகவே செயல்படுகிறது. &lsquo;ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி&rsquo; எனப் பன்முகத் தன்மையைச் சிதைக்கத் துடிக்கும் இவர்கள், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கின்றனர். தொழி லாளர் விரோதச் சட்டங்கள், கல்வியில் மதவாதம், அணு சக்தித் துறையைத் தனியார் மயமாக்குதல் என மக்கள் விரோதப் போக்கைத் தொட ர்ந்து கடைபிடிக்கும் இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். மாவட்டம் முழுவதும் இப்போராட்டத்தில் சிபிஎம் &nbsp;மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வா கிகள் மற்றும் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.