தமிழ்நாட்டின் மீதான வெறுப்பின் வெளிப்பாடே ஒன்றிய பட்ஜெட்!
4 Feb 2026, 3:49 pm

தமிழ்நாட்டின் மீதான வெறுப்பின் வெளிப்பாடே ஒன்றிய பட்ஜெட்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு விழுப்புரம், பிப். 4 - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை (பிப். 4) நடை பெற்ற அரசு விழாவில் ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத் தார். திண்டிவனம் - செஞ்சி சாலையில் கொள்ளாறிலுள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 13,879 பயனாளி களுக்கு ரூ.43.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் உரையாற்றிய முதல்வர், “இதுவரை ஒப்புக்கு சொல்லிவந்த திருக்குறள் கூட இம்முறை இல்லை. தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகும் நிலையிலும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ் நாட்டை ஒன்றிய பாஜக அரசு புறக்கணித் துள்ளது. ஆந்திரா, ஒடிசாவில் தேர்தலின் போதாவது திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால் பெயருக்கு கூட தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் பட்ஜெட்டில் இல்லை” என்றார். வெறுப்பின் வெளிப்பாடு! “ஒன்றிய பாஜகவுக்கு தேர்தல் முடிவு முன்கூட்டியே தெரிந்துவிட்டது போல, எப்படியும் தோற்கத்தான் போகிறோம், இவர்களுக்கு ஏன் நிதி என்று நினைத்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கவில்லை. தமிழர்க ளின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் ஒன்றிய பாஜக அரசு கொண்டிருக்கும் வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் ஒன்றிய பட்ஜெட் இருக்கிறது” என்று முதல்வர் தெரிவித் தார். முன்னதாக திண்டிவனத்தில் அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலை யத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம், சி.வி. கணேசன், முன்னாள் அமைச் சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான், மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்.பி.க்களின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு அஞ்சுவது ஏன்? சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர் கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு, முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரி வித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பாக எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர, ஒன்றிய பாஜக அரசு அஞ்சுவது ஏன், எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்துப் பதி விட்டுள்ள முதலமைச்சர், “எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளு மன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதற்கு எனது கடுமை யான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அவர்களது இடைநீக்கத்தைத் திரும்பப் பெற்று, முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பிரச்சனைகள் குறித்து அவர்கள் அவையில் பேசுவ தற்கான ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி யுள்ளார். “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பும் கேள்வி களைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவு படுத்தவும் அரசு முன்வர வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.