தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களுக்கானதல்ல, முதலாளிகளுக்கான பட்ஜெட்! - எம்.ஏ.பேபி

1 Feb 2026, 1:09 pm
மக்களுக்கானதல்ல, முதலாளிகளுக்கான பட்ஜெட்! - எம்.ஏ.பேபி

ஒன்றிய பட்ஜெட், உழைக்கும் மக்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு, ஒரு சில பெருநிறுவனங்களுக்கு மோடி அரசு காட்டும் கண்மூடித்தனமான விசுவாசத்தை அம்பலப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"நிதியமைச்சரால் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட், உழைக்கும் மக்களின் நலன்களையும், பரந்த தேசிய நலனையும் புறக்கணித்துவிட்டு, ஒரு சில பெருநிறுவனங்களுக்கு மோடி அரசு காட்டும் கண்மூடித்தனமான விசுவாசத்தை அம்பலப்படுத்துகிறது.
வருவாயில் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டிருப்பதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் போன்ற முக்கியத் துறைகளில் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் இந்தச் சரிவு ஈடுசெய்யப்படுகிறது.
உரங்கள், உணவு மற்றும் பெட்ரோலிய மானியங்களை மேலும் குறைத்து அறிவிப்பதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அப்பட்டமாக வெளிப்படுகிறது.
விவசாயத் துறை ஏற்கனவே விலை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், விவசாயத்திற்கு ஆதரவளிப்பது போன்ற ஒரு பாசாங்கு கூட இப்போது இல்லை. மேலும், கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் வகையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஜிஎஸ்டி மூலமாகவும், விபி-ஜி ராம் ஜி போன்ற திட்டங்களுக்கான செலவினச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்துவதன் மூலமும் மாநிலங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இந்த பட்ஜெட் சமத்துவமின்மையை மேலும் தீவிரப்படுத்துவதுடன், இந்திய பொருளாதாரத்தை பாதித்து வரும் நெருக்கடியையும் இன்னும் மோசமாக்கும். தற்போதைய உலகச் சூழ்நிலையை கருத்தில் கொண்டால், இதன் போதாமை தெளிவாகத் தெரிகிறது. வாழ்வாதாரச் சிக்கல்கள் தொடர்பாக உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் மிக முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.