ஒன்றிய பாஜக அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை
1 Apr 2026, 4:02 pm
<p>ஒன்றிய பாஜக அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ஏப்.1 முதல் அமல்படுத்தி உள்ளது. இந்த நாளை தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கின்றன. இந்த சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை துறைமுகத்தில் சிஐடியு மற்றும் ஐஎன்டியுசி சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மெட்ராஸ் போர்ட் அண்ட் டாக் எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய நீர்வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் நரேந்திர ராவ், சென்னை துறைமுக ஐஎன்டியுசி தலைவர் ஏ.பலராமன், எம்ப்ளாயிஸ் யூனியன் செயலாளர் கே.செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.</p>
