அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தொழிலாளி வர்க்கத்தின் இறுதி இலக்கு!
29 Nov 2025, 1:28 pm
<p><strong>அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தொழிலாளி வர்க்கத்தின் இறுதி இலக்கு! சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு</strong></p>
<p>கோவை, நவ. 29- கோவையில் கடந்த நவம்பர் 6 முதல் 9 வரை சிஐடியு மாநில மாநாடு எழுச்சி யுடன் நடைபெற்றது. இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய வரவேற்புக் குழுவிற்கு நன்றியும், பாராட்டும் தெரி விக்கும் நிகழ்வு வரவேற்புக் குழு தலை வர் சி.பத்பநாபன் தலைமையில் நடை பெற்றது. வரவேற்புக் குழு பொருளாளர் ஆர்.வேலுசாமி வரவேற்றார். இதில், சிஐடியு அகில இந்திய துணைத் தலை வர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டி பாபு, மாநில பொருளாளர் எஸ்.ராஜேந்தி ரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற னர். இந்நிகழ்வில், அ.சவுந்தரராசன் பேசுகையில், “கட்சி மற்றும் சங்கத்தின் இறுதி இலக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே. அரசியல் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ, அதைக் கைப் பற்றுவதுதான் நமது இலக்கு. சட்ட மன்றம், நாடாளுமன்றம் மட்டுமல்லா மல், ஊராட்சி மன்றங்கள், கூட்டுறவு சங்கங்கள் என அதிகாரம் இருக்கும் எல்லா இடங்களிலும் நாம் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற் றுவதற்கு முன், நாம் மக்களின் கண்ணில் பட வேண்டும்; நமது முகம் அவர்க ளுக்குத் தெரிய வேண்டும். மாநாடுகள் போன்ற நிகழ்வுகள் மூலம் பொதுமக்கள் நம்மைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. நமது மாநாட்டின் செய்திகள் ஊடகங்கள் செய்தியாக வெளி யிடவில்லை. ஊடகங்களின் ‘மௌன சதி’யை மார்க்ஸின் கருத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நமது செயல்பாடு களின் மூலம் மக்கள் மத்தியில், சிந்தனை யில் நாம் இருக்க வேண்டும். தற்போது ஒன்றிய ஆட்சியாளர்கள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக ஒரு “மிக மோசமான போரை” தொடுத்தி ருக்கின்றனர். அகில இந்திய தலைமை இதை ஏற்று பதிலடி கொடுக்கத் தயாராகி விட்டது. வேலைநிறுத்தப் போராட்டங்கள் வெடிக்கும், வேலை நேரத்தை உயர்த்து வது முதலாளியின் லாப ஊற்றுக் கண். மேற்கத்திய நாடுகளில் வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை இருக்கும்போது, இந்தியாவில் 48 மணி நேரம்கூட போதாது என்று கூறுகின்றனர். தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண்களைப் பாதிக்கக் கூடிய கொடிய சட்டங்களை ஆட்சியாளர் கள் தொழிலாளர் சங்கங்களைக் கலந்தா லோசிக்காமல் அமல்படுத்தியுள்ளனர். இந்த அக்கிரமங்களை எதிர்த்துத் தொழிலாளர்கள் கொந்தளிக்கும்போது, நாம் முதல் வரிசையில் நின்று போ ராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை யூட்ட வேண்டும். மாநாட்டை வெற்றிகர மாக நடத்திய வரவேற்புக் குழுவின ருக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன் என நிறைவு செய்தார். மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் பேசுகையில், “தற்போதுள்ள டிஜிட்டல் மற்றும் ஏஐ யுகத்தைப் பயன் படுத்தி, மோடி அரசு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை நியாயப்படுத்திப் பேசுகிறது. முதலாளிகளுக்குச் சேவை செய்யும் அவர்களின் கொள்கையை வீழ்த்தும் வலிமை செங்கொடி இயக்கத் திற்கு உண்டு. இந்தப் போராட்டக் களத்தில் வர்க்க ஒற்றுமையே நம் ஆயுதம்” என்றார். அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு பேசுகையில், “மாநாட் டிற்குப் பிறகு தமிழக அரசின் ஆபத்து விளைவிக்கும் தொழில்களில் பெண்க ளைப் பணிக்கு அமர்த்தும் ஆணை, பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்கள் எனப் போராட்டங்கள் தொடர்கின்றன. அடுத்த போராட்டங்க ளைச் சந்திப்பதற்கு இந்த மாநில மாநாடு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது. மாநாட்டில் 200 பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த வரவேற்புக் குழுவைப் பாராட்டுகிறேன்” என்றார். மாநிலப் பொருளாளர் எஸ். ராஜேந்தி ரன் பேசுகையில், “குடும்ப சங்கமம், தியாகிகள் கொண்டாட்டம், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு மற்றும் சிஐடியு வின் பிரகடனம் ஆகியவை மாநாட்டின் முக்கிய அம்சங்கள். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை வர்க்க ஒற்றுமை என்ற சுத்தியால் அடித்து நொறுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இம்மாநாடு அமைந்துள்ளது” என்றார். நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங் கிரி, மாநில துணை தலைவர் எம்.சந்திரன், வரவேற்புக்குழு செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வர வேற்பு குழுவின் சிறப்பான பணிகளை பாராட்டி பேசினர். இந்நிகழ்வில் திரளானோர் பங்கேற்ற னர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோக ரன் நன்றி கூறினார்.</p>
