தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் - தேர்தல் ஆணையத்தின் அவசரமும் தூய்மைப் பணியாளர்களின் துயரமும்

27 Nov 2025, 3:11 pm
எஸ்ஐஆர் - தேர்தல் ஆணையத்தின் அவசரமும் தூய்மைப் பணியாளர்களின் துயரமும்

இந்திய தேர்தல் ஆணையத்தின்  அவசர கதியில் நடைபெறும் இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர வாக்கா ளர் பட்டியல் திருத்தப் பணிகள்,  தமிழகத்தில் பெரும் சர்ச்சையை யும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள் ளது. தமிழ்நாட்டின் தேர்தல் மிக  அருகில் உள்ள நிலையில், பருவ மழை காலத்திலும் மக்களின் வாக்கு களைப் பறித்து, ஒன்றிய ஆளும் கட் சிக்கு சாதகமாகப் பயன்படுத்தவே இத் தகைய பணிகள் மேற்கொள்ளப்படுவ தாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட் டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ள னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லச் செயலாளர் பெ.சண்முகம், எஸ். ஐ.ஆர். (SIR) படிவம் நிரப்பிக் கொடுக் காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்ற  தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி காரியின் கருத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவித்து, இக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற  வேண்டும் என்றும் வலியுறுத்தியுள் ளார். குழப்பமும் குளறுபடியும்: மக்கள் திணறல்! சுமார் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழ்நாட்டில், நவம்பர் 4-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று சிறப்பு  தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் விநி யோகிக்கப்பட்டன. ஆனால், இந்தப்  படிவங்களில் கேட்கப்படும் விபரங் கள், குறிப்பாக 2002, 2005-ல் வாக்க ளித்த விவரங்கள் போன்றவற்றை அளிப்பதில் பொதுமக்கள் பெரும் சிர மத்திற்கு ஆளாகியுள்ளனர். போதிய கால அவகாசம் இன்றி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப் பணி யாளர்களை இந்தப் பணிக்கு அனுப் பியதால், அவர்களுக்குக் கடுமை யான பணிச்சுமை ஏற்பட்டு உடல்நலக் குறைவும் உண்டானது. தமிழ்நாடு முழுவதும் விநியோ கிக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்கள்,  பூர்த்தி செய்யப்படாமல் பெரும்பா லான வீடுகளில் அப்படியே வைக்கப் பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளர்களைப் பலிகடாவாக்கும் அவலம்!

இந்த இக்கட்டான நிலையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் பூர்த்தி செய்யப்படாத இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டி யல் திருத்தப் படிவங்களைத் திரும்பப்  பெறும் பணியில் தூய்மைப் பணியா ளர்களை அதிகாரிகள் ஈடுபடுத்தியுள்ள னர். குப்பை சேகரிக்கும் அதே வேளை யில், படிவங்களையும் சேகரித்து வரும்  இவர்கள், ஒருபுறம் குப்பையைச் சுமக்க, மறுபுறம் அதிகாரிகளின் நெருக்கடியைச் சுமக்கின்றனர். படிப்பறிவும், பணி அனுபவமும் உள்ள அரசு அலுவலர்களுக்கே இந்தப்  படிவங்களை எப்படி பூர்த்தி செய் வது என்று தெரியாத நிலையில், குறைந்த படிப்பறிவு கொண்ட தூய் மைப் பணியாளர்களை வைத்து படி வங்களைச் சேகரிக்கும் அதிகாரிக ளின் அணுகுமுறை நடைமுறை எதார்த் தத்தைப் புரிந்துகொள்ளாத அலட்சி யத்தைக் காட்டுகிறது. “இத்தனை படி வம் கொடுத்தோம், இத்தனை சதவீ தம் ஒப்படைத்து விட்டனர்” என்று கணக்கு காட்டுவதற்கு மட்டுமே இது பயன்படுமே தவிர, வாக்காளரின் வாக்கை உறுதிப்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது

“கையெழுத்து மட்டும் போடுங்க... அதிகாரிங்க பார்த்துப்பாங்க!”

படிவங்களைக் கொடுக்க மறுக்கும்  பொதுமக்களிடமும், முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத படிவங்களோடும் தூய்மைப் பணியாளர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், “நாங்கள் குப்பை சேக ரிப்போமா, இல்லை இந்தப் படிவத் தைச் சேகரிப்போமா என்றே தெரிய வில்லை. பூர்த்தி செய்யாவிட்டாலும், போட்டோ ஒட்டவில்லை என்றாலும் பர வாயில்லை, கையெழுத்துப் போட்டு கொடுத்தால் போதும், அதிகாரிகளே பூர்த்தி செய்து கொள்வார்கள் என்று சொல்லி வாங்கச் சொல்கிறார்கள். அதிகாரிகள் என்ன சொன்னார்களோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்தனர். படிவங்களை பூர்த்தி செய்ய முடியா மல் சிரமப்படும் மக்கள், படிவங்களை  வாங்க வரும் தூய்மைப் பணியாளர் களைக் கடிந்துகொள்ளும் சூழலும் பல  இடங்களில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலா ளர் ரத்தினகுமார் கூறுகையில், “பட்டதாரியாக அரசுப்பணியில் உள்ள அதிகாரிகளே இந்த படிவத்தை  பூர்த்தி செய்வதில் பெரும் அவதிக் குள்ளாகின்றனர். இந்நேரத்தில் தூய் மைப் பணியாளர்கள் பலருக்கும் போதிய கல்வி அறிவு இல்லை. அவர் கள் களத்திற்குச் சென்று படிவத்தைக் கேட்கும்போது, பொதுமக்கள் படிவம் தர யோசிக்கிறார்கள். இவர்களிடம் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் வருமா வராதா என்ற அச்சமும் மக்களி டம் ஏற்பட்டுள்ளது. மேலும், தூய் மைப் பணிகளை மேற்கொண்ட ஊழி யர்கள், உடைகளை மாற்றிக்கொள்ளா மல் சென்று படிவங்களைக் கேட்கும் போது பொதுமக்கள் மறுக்கின்றனர்.” “இந்தப் படிவங்களை வாங்கி வர வில்லை என்றால் ஊதியம் வராது, வரு கைப் பதிவு செய்யப்படாது என்று மிரட்டி  அனுப்புவதால், எப்படியாவது படி வங்களை வாங்கி கொடுத்தால் போதும்  என்ற எண்ணம் தான் அவர்களுக்கு வரு கிறது. இந்தப் பணியில் தூய்மைப் பணி யாளர்களைப் பயன்படுத்துவது உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின ருக்கு ஏற்புடையது அல்ல. இளநிலை உதவியாளர் போன்ற ஊழியர்களைப் போதுமான எண்ணிக்கையில் அனுப்பி படிவங்களைச் சேகரிக்க வேண்டும் என்றார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவங்களைப் பூர்த்தி செய்வ தில் பொதுமக்களுக்கும், அலுவலர் களுக்குமே குழப்பம் ஏற்பட்டு வரும்  நிலையில், தூய்மைப் பணியாளர்க ளைக் கொண்டு இந்தப் பணி நடை பெறுவது வேதனையானது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல், தூய் மைப் பணியாளர்களும் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் அவசரமும், அதிகாரிகளின் அலட்சியமும் ஏழை எளிய ஊழியர்களின் உழைப்பைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது. - கவி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.