தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியர் நேரில் வாக்குறுதி அளித்தும் மயான வசதி ஏற்படுத்தி தராத அவலம்!

19 Nov 2025, 3:33 pm
சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியர் நேரில் வாக்குறுதி அளித்தும் மயான வசதி ஏற்படுத்தி தராத அவலம்!
<p><strong>சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியர் நேரில் வாக்குறுதி அளித்தும் மயான வசதி ஏற்படுத்தி தராத அவலம்!</strong></p> <p>ஈரோடு, நவ.19- அந்தியூர் அருகே சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம் நடத் திய நிலையில், சட்டமன்ற உறுப்பி னர் மற்றும் அதிகாரிகள் நேரில் வாக்குறுதி அளித்தும், மயான வசதி ஏற்படுத்தி தராத அவல நிலை நீடித்து வருகிறது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில், பொய்யேரிக்கரை பகு தியில் வகிக்கும் மக்கள் சுமார் 75 ஆண்டுகளாக மயானமாக குறிப் பிட்ட இடத்தைப் பயன்படுத்தி வந்த னர். இறந்தவர்களை புதைத்து வந்த &nbsp;இடத்தில், கடந்த சில ஆண்டுக ளாக புதைக்க விடாமல், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் தடை பெற் றுள்ளார். இதனால் கடந்த 4 &nbsp;ஆண்டுகளாக ஒவ்வொரு முறை மரணம் நிகழும் போதும் காவல் துறையினர் உதவியுடன் வருவாய்த் துறையினர் அங்கு சென்று மயா னத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்து வருகின்றனர். வேறு வழி யின்றி தடையை மீறி, சடலத்தை அடக்கம் செய்யும் போது வழக்கு போடப்படுகிறது. இவ்வாறு அந்த ஊரில் ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஊரில் பாதிக்கும் மேற்பட்டோர் மாதந்தோ றும் நீதிமன்றத்திற்கு நடந்து வரு கின்றனர். இந்த அவலத்தைப் போக்க வேண்டுமென அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் சார்பில் பல்வேறு &nbsp;போராட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. அப்போது வட்டாட்சியர், பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அறிவிப்பதும், பின்னர் கைவி ரிப்பதும் வாடிக்கையாகவுள்ளது. கடந்த மாதம் நிகழ்ந்த ஒருவர் &nbsp;மரணத்தை அடுத்து சடலத்துடன் பொதுமக்கள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடா சலம், வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று, பிரச்சனைக்குரிய நிலம் அளவீடு செய்யப்படும் என உறு தியளித்தனர். இதன்மூலம் தனி நபர் செய்துள்ள ஆக்கிரமிப்பு அகற் றப்படும் என்றும், மயானப் பிரச்ச னைக்கு தீர்வு காணப்படும் என &nbsp;அப்பகுதி மக்கள் நம்பினர். அளவி டும் பணிகள் நடைபெற்றது. &nbsp;ஆனால் அத்துக்காட்டப்பட வில்லை. இதனால் சுமார் 4 ஆண்டு கால போராட்டம் முடிவிற்கு வரா மல் தொடர்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்க மும் களத்தில் நிற்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.