ஆட்சியரின் பரிந்துரையை புறம்தள்ளிய பேரூராட்சி நிர்வாகம்!
4 Dec 2025, 3:52 pm
<p><strong>ஆட்சியரின் பரிந்துரையை புறம்தள்ளிய பேரூராட்சி நிர்வாகம்!</strong></p>
<p>ஈரோடு, டிச. 4- மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை புறம்தள்ளிய சிவகிரி பேரூராட்சி நிர்வா கத்தைக் கண்டித்து, வியாழ னன்று பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சிவ கிரி பேரூராட்சி, தலைய நல்லூர் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இடையூறாக அப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கழிப்பறைகள், ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டது. பேரூராட்சியின் சார்பில் அமைக்கப்படும் பாதை அமையுமிடம் பேரூராட்சிக்கு சொந்த மானதல்ல; சாலை புறம்போக்கும் அல்ல. பொதுமக்கள் வசிப்பதற்கான ஊர் நத்தம் என வகைப்படுத்தப்பட்டதாகும். இந்நிலை யில், வருவாய்த்துறை மூலம் பேரூராட்சி நிர்வாகம் அளவீடு செய்து 35 அடி முதல் 56 அடி வரை பொதுமக்கள் ஆக்கிரமித் துள்ளதாக கூறியது. அதிலுள்ள வீடு மற்றும் கழிப்பறைகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், பேரூ ராட்சி நிர்வாகம் தேவைக்கேற்ப சாலை அமைப்பதற்கு எந்த விதமான ஆட்சேப ணையும் இல்லை என்றும், ஊர் நத்தத்தில் பொதுமக்கள் அனுபவத்தில் உள்ள மேற் படி நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள் ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றும் உத்த ரவை நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அந்த மனு வின் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சி யர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கிடையில், மீண்டும் பேரூராட்சி நிர் வாகம் மூன்று நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியரின் பரிந்து ரையை அமல்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்தை கண் டித்து வியாழனன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் ஈரோடு உழைக்கும் மக்கள் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்போர் நல சங்கத்தின் தலை வர்கள் எம்.சசி, ரமேஷ், கதிர்வேல் ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில் விவ சாயத் தொழிலாளர் சங்க செயலாளர் டி.தங்க வேல், முன்னாள் வட்டாட்சியர் க.ராஜ் குமார், உழைக்கும் மக்கள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் சி.முருகேசன், செயலா ளர் புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
