தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடி!

23 Feb 2026, 5:35 pm
தமிழ்நாடு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடி!

தமிழ்நாடு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடி!

இறுதிப் பட்டியல் வெளியீடு!

சென்னை, பிப். 23 - தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளி யிடப்பட்டது. தமிழக தலைமைத் தோ்தல் அதி காரி அா்ச்சனா பட்நாயக் பட்டியலை வெளியிட்டார். இந்த இறுதிப்பட்டியலில், 5 கோடியே 67  லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஆண்கள்: 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர். பெண்கள், 2 கோடியே  89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர். மாற்றுப் பாலி னத்தவர் 7 ஆயிரத்து 671 பேர். அதேநேரம், வாக்காளர் பட்டியலிலிருந்து 74 லட்சத்து 07 ஆயிரத்து 207 பேர் நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தமிழகத்தில் அக்டோபர் 27 அன்றைய நில வரப்படி 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆருக்குப் பின் வெளி யான வரைவு வாக்காளர் பட்டியலில் அது 5  கோடியே 43 லட்சமாக குறைந்தது. 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெற்ற சேர்த்தல், நீக்கல், திருத்தல் பணிகளின் மூலம் 27 லட்சத்து 53 ஆயிரத்து 796 வாக்காளர்கள் இடம் பெற்றனர். தகுதிபெறாத 4.23 லட்சம் நபர்கள் நீக்கப்பட்டனர்.  அதன்படி, வாக்காளர் இறுதிப் பட்டியலில், 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மாவட்டங்கள் வாரியான இறுதி வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) வெளியிடப்பட்டது. அதிகபட்ச மாக திருவள்ளூர் மாவட்டத்தில் 31 லட்சத்து 57 ஆயிரத்து 413 பேர், சென்னையில் 28  லட்சத்து 30 ஆயிரத்து 936 பேர், சேலம் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 55 ஆயிரத்து 830 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.in.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்

இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 27- சோழிங்கநல்லூர் சட்டமன்றத்  தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கா ளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதி யில் ஆண்கள் 2,62,621 பேர், பெண்கள் 2,74,254 பேர், மாற்றுப் பாலினத்தவர் 116 பேர்  என மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ள னர்.

சிறிய தொகுதி துறைமுகம்

தமிழ்நாட்டிலேயே குறைந்த எண்ணிக் கையிலான வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில், ஆண்கள் 58,221 பேர்; பெண்கள் 58,620 பேர்;  மாற்றுப் பாலினத்தவர் 55 பேர் என மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 896 வாக்காளர்கள் உள்ளனர்.

19 வயதுக்கு  உட்பட்டோர் 12.51 லட்சம் பேர்

18-19 வயதுக்கு உட்பட்ட வாக்கா ளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம், மாற்றுத் திறனாளிகள் எனக் குறிக்கப் பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+) 3.99 லட்சம்.

வ.எண்                  மாவட்டம்                             வாக்காளர்கள்

1.                            திருவள்ளூர்                             31,57,413

2.                             சென்னை                                28,30,936

3.                            காஞ்சிபுரம்                              11,92,194

4.                             வேலூர்                                      11,33,587

5.                             கிருஷ்ணகிரி                          15,54,040

6.                             தருமபுரி                                    12,40,108

7.                             திருவண்ணாமலை                    19,19,159

8.                             விழுப்புரம்                                     15,86,653

9.                              சேலம்                                              27,55,830

10.                           நாமக்கல்                                        13,10,951

11.                           ஈரோடு                                              17,40,222

12.                            நீலகிரி                                             5,47,133

13.                             கோவை                                            26,96,813

14.                             திண்டுக்கல்                                       16,72,075

15.                               கரூர்                                                      8,45,164

16.                              திருச்சி                                                   21,26,303

17.                               பெரம்பலூர்                                         5,55,131

18.                             கடலூர்                                                   20,15,796

19.                            நாகப்பட்டினம்                                      5,27,947

20.                           திருவாரூர்                                                9,79,652

21.                            தஞ்சாவூர்                                               19,51,445

22.                           புதுக்கோட்டை                                       12,98,907

23.                            சிவகங்கை                                              11,10,599

24.                           மதுரை                                                      24,66,954

25.                          தேனி                                                          10,33,373

26.                           விருதுநகர்                                                14,97,417

27.                           இராமநாதபுரம்                                       11,23,029

28.                           தூத்துக்குடி                                               13,76,624

29.                           திருநெல்வேலி                                         12,53,264

30.                            கன்னியாகுமரி                                      15,10,550

31.                            அரியலூர்                                                 15,22,954

32.                            திருப்பூர்                                                    19,55,283

33.                             கள்ளக்குறிச்சி                                        11,09,911

34.                             தென்காசி                                               12,64,411

35.                             செங்கல்பட்டு                                          22,60,036

36.                              திருப்பத்தூர்                                           9,11,599

37.                             ராணிப்பேட்டை                                     9,44,701

38.                            மயிலாடுதுறை                                       7,29,216

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.