குள்ளம்பட்டியில் 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிட வளாகம்
5 Dec 2025, 4:21 pm
<p><strong>குள்ளம்பட்டியில் 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிட வளாகம்</strong></p>
<p>கிருஷ்ணகிரி, டிச.5- போச்சம்பள்ளி வட்டம் குள்ளம்பட்டியில் சுமார் 1,200 பேர் வசிக்கும் நிலையில், ரூ. 9,50,000 மதிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பிட வளாகம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. கழிப்பிட வளாகம் திறக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருப்பதால், வளாகத்தைச் சுற்றிலும் தளம் சிதிலமடைந்து செடிகள் மண்டி காணப்படுகிறது. இங்குள்ள பாதிக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் கழிப்பிடம் இல்லாத நிலையில், திறந்தவெளியில் தனியார் நிலங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. நில உரிமையாளர்கள் பல நேரங்களில் தடுத்து அநாகரீகமாகப் பேசுவதால் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் ஆகியோருக்குப் பலமுறை மனு கொடுத்தும் இந்த வளாகத்தைத் திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கட்டப்பட்ட நவீனக் கழிப்பிட வளாகமும் பராமரிக்கப்படா மல் சிதிலமடைந்து வருவதால், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த வளாகத்தைத் திறந்து சீர்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
