தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

12 Jan 2026, 6:02 pm
                     ஸ்கேன் இந்தியா
<p><strong>அகோரப் பசி நிதி நிலை அறிக்கைக்கான நேரம் வந்துவிட்டது. </strong></p> <p><strong>வழக்கம்</strong> போலவே இந்திய முதலாளிகள் அகோரப் பசியுடன் கிளம்பியுள்ளார்கள். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 78 பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கை 51 விழுக்காடாகக் குறைத்து விடலாம் என்று ஆலோசனை சொல்கி றார்கள். அதிலிருந்து என்ன கிடைக்கும்..? 10 லட்சம் கோடி ரூபாய் கிடைக்குமாம்... சரி, அதை வைத்து என்ன பண்ணலாம்..? வேறென்ன.. தனியார் பெரு நிறுவனங்களுக்கு &ldquo;ஊக்கத்தொகை&rdquo; என்ற பெயரில் இந்தப் பணத்தை வாரி வழங்கலாம். ஏற்கெனவே மக்கள் நலத்திட்டங்களை முடக்கி, அதற்கான ஒதுக்கீடுகளை ஊக்கத் தொகைக்காக திசை திருப்பி விடுகிறார்கள். இப்போது அரசின் சொத்துகளை விற்று, அவற்றையும் தாரை வார்க்க வேண்டும் என்கிறார்கள். இது போன்றவற்றை எதிர்த்துதான் பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. விவசாயிகளும் இதில் கைகோர்க்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா..? எல்லாவற்றையும் மின்னணு முறையில் மாற்றி விட்டோம். டிஜிட்டல் தேசமாக மாறியுள்ளது. இப்போதெல்லாம் மக்களே டிஜிட்டல் முறை யில்தான் பணம் செலுத்த விரும்பு கிறார்கள் என்று ஒன்றிய அரசு விளம்பரங்களை வெளியிட்டு வரு கிறது. ஆனால், டிஜிட்டல் மோசடி களைத் தடுக்கப் போதிய நடவ டிக்கைகள் இல்லை. 81 வயதான தனேஜாவும், 77 வயதான அவரது துணைவியார் இந்திராவும், டிஜிட்டல் மோசடியில் 14.5 கோடி ரூபாயை இழந் துள்ளனர். பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்து விட்டு, ஓய்வு பெற்ற பிறகு தாயகம் திரும்பி வாழ லாம் என்று வந்தவர்கள் வீடியோ அழைப்புக ளில் சீருடை, அரசு சின்னம், அரசு முத்திரை &nbsp;உள்ளிட்டவற்றைப் பார்த்துப் பயந்து போய் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளனர். இதுபோன்ற மோசடிக ளில் குற்றவாளிகள் பெரும்பாலும் சிக்குவதே யில்லை. நிதியமைச்சகமோ பொறுப்பை தனி நபர்கள் மீது போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறது. தொடர்கிறது மணிப்பூர், &nbsp;பிஷ்ணுபூர் நகரில் ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் மீது குண்டு வீச்சு நடந்திருக்கிறது. இதற்கு எதிராக அனைத்து நிலையங்களும் காலவரையற்று மூடுகிறோம் என்று அறிவித்துவிட்டன. வியாபார நிறுவனங்களுக்கும், அப்பாவி மக்களுக்கும் எந்தவிதமான பாதுகாப்பும் மாநிலத்தில் இல்லை. தொடர்ந்து தாக்குதல்கள் நடக்கின்றன. அறிவிக்கப்படாத பிரிவினை மாநி லத்தில் நடைமுறையில் உள்ளது என்கிறார்கள் மக்கள். அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் அலைகிறார் கள். பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முகாம்களில் உள்ளனர். அமைதி திரும்புவதற்கான அறிகுறி எது வுமே தெரியவில்லையே என்று மக்கள் புலம்பிக் கொண் டிருக்கின்றனர். எப்படியாவது மீண்டும்அதிகாரத்தில் அமர்ந்து விடலாமா என்று பாஜகவினர் துடிக்கிறார்கள். மக்களோ, தேர்வு செய்யப்பட்ட அரசும் இல்லை, இருக்கும் அரசும் இயங்குவதில்லை என்று கொந்தளிக்கிறார்கள். இதுவும் கூட்டணி..? மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்களில் மும்பை மாநகராட்சிக்கும் தேர்தல் நடக்கி றது. பாஜக தலைமையிலான ஆளும் கூட்ட ணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைக் கழற்றி விட்டார்கள். அவர்க ளுக்கு செல்வாக்கில்லை, அவர்களால் வெற்றி பெற முடியாது, சிறிய கட்சி என்பதெல்லாம் காரணமாகச் சொல்லப்படவில்லை. அவர்கள் தனியாக நின்றால், &nbsp;இஸ்லாமியர் வாக்குகளைப் பிரித்து விடுவார்களாம். இதை ஏற்றுக்கொண்ட அஜித் பவாரும் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அவரது வேட்பா ளர்கள் களமிறங்கியுள்ளனர். அதிகாரத்தில் தொடர்வ தற்கும், தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் எதை வேண்டுமானாலும் அஜித் பவார் செய்வார். இதெல்லாம் அரசியலா என்று மக்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.