தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தி டெலிகிராப்’ முன்னாள் ஆசிரியர் ஆர்.ராஜகோபாலுக்கு மீண்டும் பாஸ்போர்ட்

5 Jul 2026, 8:52 pm
‘தி டெலிகிராப்’ முன்னாள் ஆசிரியர்  ஆர்.ராஜகோபாலுக்கு மீண்டும் பாஸ்போர்ட்

‘தி டெலிகிராப்’ முன்னாள் ஆசிரியர் ஆர்.ராஜகோபாலுக்கு மீண்டும் பாஸ்போர்ட்

புதுதில்லி மூத்த பத்திரிகையாளரும், தி டெலி கிராப் இதழின் முன்னாள் ஆசிரி யருமான ஆர்.ராஜகோபாலுக்கு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற வாக்கா ளர் பட்டியல் நீக்கத்தை (எஸ்ஐஆர்) காரணம் காட்டி பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வ லைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஸ் போர்ட் இல்லாத காரணத்தினால் வெளி நாட்டில் நடைபெற்ற தனது மகளின் திரும ணத்திற்கு செல்ல முடியாமல் ஆர்.ராஜகோ பால் கடும் இன்னலுக்கு ஆளாகினார்.

எம்.ஏ.பேபி

இந்த விவகாரத்தை “மிக மோசமான நீதி யின் வீழ்ச்சி” என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி,”வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடை முறைகள் ஏழை மற்றும் எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் என சிபிஎம் முதலிலேயே எச்சரித்தது. தற்போது ஒரு புகழ்பெற்ற ஒரு பத்திரிகை ஆசிரியரின் வாக்கு மற்றும் பாஸ்போர்ட் உரிமையே பறிக் கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது” என கடும் கண்டனம் தெரிவித்தார். அதே போல இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், தில்லி பிரஸ் கிளப் உள்ளிட்ட ஜனநாயக பாதுகாப்பு பத்திரிகை சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

சிபிஎம் கடிதம்

அதே சமயம் சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்.ஜான் பிரிட்டாஸ் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கருக்கு,”பாஸ்போர்ட் என்பது குடியுரி மைக்கான முழுமையான ஆதாரம் அல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறினாலும், அது இறையாண்மை மிக்க ஓர் ஆவணம் ஆகும். நாடாளுமன்றம் சொல்லாத ஒரு தகுதி யிழப்பை, நிர்வாக நடைமுறைகள் மூலம் புகுத்தக் கூடாது. இதனால் பத்திரிகையாளர் ஆர்.ராஜகோபாலுக்கு வாக்குரிமை, பாஸ் போர்ட் உடனடியாக வழங்க வேண்டும்” என கடந்த வாரம் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

இந்த கடிதம் மற்றும் பல்வேறு தரப்பிலி ருந்தும் எழுந்த கடுமையான அழுத்தங்களைத் தொடர்ந்து, கொல்கத்தா காவல்துறை இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்தது. இறுதி யாகத் தற்பொழுது ‘தி டெலிகிராப்’ முன்னாள் ஆசிரியர் ஆர்.ராஜகோபாலுக்கு புதுப் பிக்கப்பட்ட பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது என செய்திகள் (தி வயர்) வெளியாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.